Connect with us
boomerang-movie

செல்வா இயக்கம்…! அரவிந்த்சாமி – ரித்திகா சிங் இணைந்தனர்..

News | செய்திகள்

செல்வா இயக்கம்…! அரவிந்த்சாமி – ரித்திகா சிங் இணைந்தனர்..

ரியல் குத்துச்சண்டை வீரரான ரித்திகா சிங், சுதா இயக்கத்தில் மாதவன் நாயகனாக நடித்த இறுதிச்சுற்று படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அவர், அடுத்தபடியாக விஜய சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, லாரன்சுடன் சிவலிங்கா படங்களில் நடித்துள்ளார். அந்த படங்களைத் தொடர்ந்து சில படங்களில் நடிக்க பேசி வந்தவர் தற்போது செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் படத்தில் கமிட்டாகி விட்டார்.

மேலும், இந்த படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ரித்திகா சிங் மட்டுமின்றி இன்னொரு நாயகியாக சாந்தினியும் நடிக்கிறார். இவர்கள் தவிர மற்றுமொரு கதாபாத்திரத்திற்காக சில நடிகைகளிடம் பேசி வருகின்றனர். சமீபகாலமாக வில்லத்தனமான கதைகளில் நடித்து வரும் அரவிந்த்சாமி, இந்த படத்தில் குடும்ப சூழல் கதையில் நடிக்கிறார். பிப்ரவரி 9-ந்தேதி போகன் படம் திரைக்கு வந்ததும் 13-ந்தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் அரவிந்த் சாமி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top