ரித்விகாவிடம் சரண்டரான அரவிந்த்சாமி.. வைரலாகும் புகைப்படம்!

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவும் வகையில்
இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஜெயந்திரா ஆகியோர் இணைந்து நெட்பிளிக்ஸுக்காக ஆந்தாலஜி படத்தை தயாரித்து வருகின்றனர். இதற்கு நவரசா எனப் பெயரிடப்பட்டுள்ளனர்.

இத்தொடரின் சிறப்பம்சம் என்னவென்றால் காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கிவுள்ளனர். இதற்கு கிரியேட்டிவ் ஹெட்டாக மணிரத்னம் உள்ளார்.

இந்த 9 படங்களையும் இயக்க கெளதம் மேனன், பிஜோய் நம்பியார், அரவிந்த் சாமி, கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்பராஜ், கே.வி.ஆனந்த், சர்ஜுன், பொன்ராம் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். இதில் அரவிந்த்சாமி நடித்துள்ள அறிவியல் புனைகதையை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் பிக்பாஸ் ரித்விகா நடிகர் அரவிந்த் சாமியுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Riythvika
Riythvika

இந்த புகைப்படத்தில் ரித்விகா போலீஸ் கெட்டப்பிலும், அரவிந்த் சாமி கைதி லுக்கிலும் இருக்கிறார்கள். புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்