புனே: முன்னாள் கேப்டன் தோனியை, புனே அணியின் உரிமையாளரின் சகோதரர் மீண்டும் மறைமுகமாக டுவிட்டரில் தாக்கியுள்ளார்.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இத்தொடர் துவங்குவதற்கு முன்னதாகவே புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி, அதிரடியாக நீக்கப்பட்டார்.

அதிகம் படித்தவை:  நியூசிலாந்திற்கு எதிரான பரபரப்பான போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி.!

லீக் போட்டிகளின் போது, தோனியின் செயல்பாடு குறித்து, புனே அணியின் உரிமையாளர் சஞ்ஜீவ் கோயின்காவின் சகோதரர், ஹர்ஸ் கோயின்கா டுவிட்டரில் தோனியை குத்திக்காட்டி பதிவிட்டு வந்தார். இது கொஞ்ச நாட்களாக அமைதியாகியிருந்த நிலையில், மீண்டும் ஹர்ஸ் கோயின்கா, தோனியை மீண்டும் விமர்சித்துள்ளார்.

கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது, திருப்பம் தந்த திருப்பதி, ஸ்மித், தாஹிர் ஆகியோரை ஹீரோக்கள் என தெரிவித்துள்ளார் ஹர்ஸ். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,’ புனே அணியின் சிறப்பம்சமே, ஒவ்வொரு போட்டியிலும் புதுப்புது ஹீரோக்கள் உதிப்பது தான்.’ என பதிவிட்டிருந்தார்.

அதிகம் படித்தவை:  தமிழக மக்களுக்கு எதிரான கருத்து: தனுஷ் மறுத்தும்,விஷால் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?

https://twitter.com/hvgoenka/status/859830830360928261

ஆனால், தோனி செய்த ஸ்பெம்பிங், இக்கட்டான நிலையில் அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது