fbpx
Connect with us

Cinemapettai

நல்ல வாய்ப்பை நச்சுன்னு பிடிச்சுக்குமா புனே அணி? : கொல்கத்தா பேட்டிங்

Match-Highlights

நல்ல வாய்ப்பை நச்சுன்னு பிடிச்சுக்குமா புனே அணி? : கொல்கத்தா பேட்டிங்

கொல்கத்தா : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.

10வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகின்றது. இதன் 41வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட் அணிக்கும் இடையே கொல்கத்தாவில் நடைப்பெறுகிறது..

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏற்கனவே 10 போட்டியில் 7 வெற்றிகளை பெற்று பிளே ஆப் சுற்றுக்கு கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. புனே அணி 10 போட்டியில் 6ல் வெற்றி பெற்றுள்ளது.

இன்று நடக்கும் கொல்கத்தா அணிக்கு எதிராக வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு ஏற்படும். இதில் சிறப்பாக புனே அணி வெற்றி பெறும்பட்சத்தில் ரன்ரேட் அதிகமாக வைத்து 4வது இடத்தை தக்க வைக்கலாம்.

இருப்பினும் இனி வரும் போட்டிகளில் அணிகளின் வெற்றி மற்றும் செயல்பாடு பொருத்தே பிளே ஆப் சுற்று அணிகளின் நிலவரம் தெரியவரும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top