India | இந்தியா
இன்று திடீரென உயிரிழந்த நடிகர் ரிஷி கபூர்.. அவர் மரணத்திற்கு இதுதான் காரணமா? அதிர்ச்சி தகவல்
நடிகர் ரிஷிகபூர் சில நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அமெரிக்காவில் சுமார் ஒரு வருடம் தங்கி சிகிச்சை பெற்றார். பிப்ரவரி மாதம் திடீரென மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
மேலும் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மீண்டும் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. உடனே மும்பையில் உள்ள ஹெச் என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ரிஷிகபூர்க்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சற்று முன் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இந்த மரணமடைந்த தகவலை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் மிகவும் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
அவர் சென்று விட்டார். ரிஷி கபூர் போய்விட்டார். இறந்துவிட்டார்.. நான் உடைந்துவிட்டேன் என வருத்ததுடன் பதிவிட்டுள்ளார். அவரது இறப்புக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் ரிஷி கபூக்கு வயது 67.
ரிஷி கபூர்க்கு வந்த கேன்சர் நோய் சரி பண்ண முடியாத அளவு இருந்ததாம். கோடீஸ்வர பிரபலமாக இருப்பவர்களுக்கே சரி பண்ண முடியாத அளவு இந்த கேன்சர் இருக்கும் என்றால் இந்த நோயின் பாதிப்பு எந்த அளவு இருக்கும் என்று நினைத்து பாருங்கள்.
ரிஷி கபூர் 1970 மற்றும் 80-களில் பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்தார். ரிஷிகபூர் மகன் ரன்பீர் கபூர் முன்னணி கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
