சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தோனியால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால்  தான் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக விளையாட முடியும் என்று இந்திய தேர்வு குழு உறுப்பினர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.

மினி உலக்கக்கோப்பை கிரிக்கெட் தொடரான சாம்பியன்ஸ் டிராபி ஜீன் மாதம் 1ம் தேதி  துவங்க உள்ளது.

இதில் பங்கேற்கும் இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பரான தோனிக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பண்ட் அணியில் இடம்பெறலாம் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அதிகம் படித்தவை:  இன்று நாள்எப்படி? (4-5-2017)

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய தேர்வு குழு உறுப்பினர் சபா கரீம் “ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக கருதினாலும் அவர்கள் அந்த எண்ணத்தை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதிகம் படித்தவை:  2.0 உடன் ஒப்பிட்டால் எந்திரன் வெறும் டீஸர் தான் ! 2.0 (VFX Featurette) மேக்கிங் வீடியோ உள்ளே !

50 ஓவர் போட்டியில் விளையாட டி20 போட்டி அனுபவம் மட்டும் போதாது. தோனி போன்ற அனுபவம் மற்றும் செயல்படும் திறன் உள்ளவரை தான் தேர்ந்தெடுக்க முடியும். ஒருவேளை தோனி காயம் அல்லது விளையாட முடியாத சூழல் உருவானால் தான் மற்ற வீரர்கள் குறித்து யோசிக்கப்பட்டும் என தெரிவித்துள்ளார்.