Tamil Cinema News | சினிமா செய்திகள்
வதந்தியை பரப்பாதீர்கள், என்னை கிரிக்கெட்டில் கவனம் செலுத்த விடுங்கள் – கடுப்பான ரிஷப் பண்ட் !
ரிஷப் பண்ட்
இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் சமீபகாலமாக அதிகம் பேசப்படும் பெயர். வர்ணனையாளர்கள் தொடங்கி, ரசிகர்கள், சக வீரர்கள், கோச்சுகள் வரை ஆச்சர்யமாக பார்க்கும் ஒரு வீரர். உத்தரகண்ட் மாநிலத்தின் ரூர்க்கியைச் சேர்ந்த இவருக்கு 20 வயது தான் ஆகிறது. டெல்லி அணிக்காக ரஞ்சி போட்டிகளில் ஆடி வரும் இவர் இடது கை பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர்.
யு 19 , ரஞ்சி , லிஸ்ட் ஏ , ஐபில் என்று படிப்படியாக முன்னேறி வருகிறார். கிறிஸ் கெயில், மெக்குலம் போல தனி ஆளாக ஆட்டத்தின் போக்கை மற்றும் திறன் உடையவர்.
ஐபில் 2018
இந்த சீசன் டெல்லி அணி இவரை ஏலத்துக்கு முன்பே தக்கவைத்துக் கொண்டது. அவர்கள் நம்பிக்கையை காப்பதும் விதமாக தன் பாட்டிங்க் மூலமாக அசத்தி வருகிறார். தற்பொழுது ஆரஞ்சு கேப் இவர் வசம் தான். 12 போட்டிகளில் 582 ரன் குவித்துள்ளார். சராசரி 52 . 91 , ஸ்ட்ரிக் ரேட் 179 . மேலும் இதுவரை இவர் 61 பௌண்டரி மற்றும் 31 சிக்ஸர் இந்த சீசனில் அடித்துள்ளார்.
இதில் ஒரு சதமும், மூன்று அரைசதமும் உள்ளடங்கும். ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக தனி ஆளாக 63 பந்துகளில் 128 ரன்களை விளாசியது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே இவரை உற்று நோக்கியது.
இந்நிலையில் தான் பிசிசிஐ அறிவித்த ஆப்கானிஸ்தான் டெஸ்ட் , அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி௨௦, ஒரு நாள் போட்டிக்கான தொடரில் ஆடும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் தேர்வாளர்கள் மீது பண்ட் கோபமாக உள்ளதாகவும், அவர்களை சாடியதாகவும் தகவல்கள் வெளியாகின. போலி ட்விட்டர் கண்ணகில் போட்ட ஸ்டேட்டஸ் இணையத்தில் வைரலானது. பலரும் ரீ – ட்வீட் செய்தனர்.
“நான் தேர்வாளர்கள் மீது கோபமாக உள்ளேன். ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, அவ்வளவு ஏன் ஐயர்லாந்து அணிக்கு எதிராக கூட என்னை அவர்கள் சேர்க்கவில்லை. அந்த கோவம் தான் நான் இன்று அடித்த ஷாட் ஆக மாறியது. இந்த ஆட்டத்தை பார்த்த பின்பாவது, நான் இந்திய அணியில் இடம் பெற தகுதியானவன் என்று உணருவார்கள்.” என்பதே அந்த கருத்து .
இந்நிலையில் தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பண்ட் விளக்கம் அளித்துள்ளார்.
“இந்திய அணிக்காக நான் தேர்வாகவில்லை என்பதால் நான் சொன்னதாக பரவும் விஷயம் வெறும் வந்ததியே. அது போன்று எந்த ஒரு நிகழ்வும் நடக்கவில்லை. நான் விளக்கம் அளிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளேன். வதந்தியை பரப்பாதீர்கள், என்னை கிரிக்கெட்டில் கவனம் செலுத்த விடுங்கள்” என்று கூறியுள்ளார்.
சினிமாபேட்டை கமெண்ட்ஸ்
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் !
