Photos | புகைப்படங்கள்
தன் காதலியை உலகிற்கு அறிமுகப்படுத்திய ரிஷப் பண்ட். போட்டோ உள்ளே.
ரிஷப் பண்ட்
இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் சமீபகாலமாக அதிகம் பேசப்படும் பெயர். வர்ணனையாளர்கள் தொடங்கி, ரசிகர்கள், சக வீரர்கள், கோச்சுகள் வரை ஆச்சர்யமாக பார்க்கும் ஒரு வீரர். இடது கை பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர். உத்தரகண்ட் மாநிலத்தின் ரூர்க்கியைச் சேர்ந்த இவருக்கு 21 வயது தான் ஆகிறது.
யு 19 , ரஞ்சி , லிஸ்ட் ஏ , ஐபில் என்று படிப்படியாக முன்னேறி இந்திய அணியில் இடம் பிடித்துவிட்டார். கிறிஸ் கெயில், மெக்குலம் போல தனி ஆளாக ஆட்டத்தின் போக்கை மற்றும் திறன் உடையவர்.

Team India
ஒரு நாள் மட்டும் டி 20 போட்டிகளில் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் இருப்பதன் காரணத்தால், பேக் அப் வீரராக மட்டும் உள்ளார். எனினும் டெஸ்ட் போட்டிகளில் சாஹா, படேல், கார்த்திக் ஆகியோரை ஓரம் கட்டி இடம் பிடித்து விட்டார். இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்களில் சத்தம் அடித்து அசத்தியுள்ளார். சமீபத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவை வென்றதில் இவரது பேட்டிங், கீப்பிங் பங்கும் உள்ளது.
இந்நிலையில் இவர் சமீபத்தில் இன்ஸ்டகிராம் வாயிலாக தன் காதலி “ஈஷா நெகி” என்பதாக போட்டோவுடன் அறிவித்துள்ளார். தலைப்பாக “நான் உன்னை மகிழ்விக்க விரும்புகிறேன், ஏனென்றால் உன்னால் தான் நான் மகிழ்ச்சியாக உள்ளேன்” வைத்தார்.

Risabh Pant – Isha Negi
அவரும் இன்ஸ்டாகிராமில் போட்டோவை பகிர்ந்தார்.
“My man, my soulmate, my best friend, the love of my life.
ஈஷா நெகி
இவர் உத்ரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவராம். டெல்லியில் அமிட்டி காலேஜில் படித்துள்ளார், மற்றும் இன்டெரியர் வேலை பாடுகள் செய்யும் தொழிலில் உள்ளவராம்.
வாழ்த்துக்கள் ரிஷப் பண்ட்.
