fbpx
Connect with us

Cinemapettai

ரியோ ராஜ் பெரிதும் நம்பியிருந்த படம் OTT ரிலீஸ்.. அடுத்த சிவகார்த்திகேயன் கனவு போச்சா என புலம்பல்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரியோ ராஜ் பெரிதும் நம்பியிருந்த படம் OTT ரிலீஸ்.. அடுத்த சிவகார்த்திகேயன் கனவு போச்சா என புலம்பல்!

தமிழ் சினிமாவில் தற்போது தொலைக்காட்சியில் இருந்து நேரடியாக சினிமாவுக்கு வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சிவகார்த்திகேயன், பிரியா பவானி சங்கர், வாணி போஜன், கவின் ஆகியோரைத் தொடர்ந்து ரியோ ராஜ் இணைந்துள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா எனும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ரியோ. அதன் பிறகு தற்போது பிளான் பண்ணி பண்ணனும் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தை பானா காத்தாடி படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கும் இந்தப் படம் கோடை வெளியீடாக வெளிவர இருந்தது.

ஆனால் சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால் தற்போது OTT தளங்களில் வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகபட்சமாக இருக்கிறதாம். அதுமட்டுமில்லாமல் பெரிய அளவு மார்க்கெட் இல்லாததால் தியேட்டரை விட OTT தளங்களில் லாபம் அதிகமாக வருகிறதாம்.

தியேட்டரில் வெளியானால் மட்டுமே ஹீரோவாக கொண்டாடுவார்கள். அப்படி இல்லை என்றால் சீரியல் நடிகரை போலாகிவிடும் என்ற நிலைமை ரியோ ராஜ்க்கு ஏற்பட்டுள்ளது. இதனால் எப்படியாவது சிவகார்த்திகேயன் போல் பெரிய ஹீரோவாக வேண்டும் என்ற கனவில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டார்கள் என புலம்பிக் கொண்டிருக்கிறாராம் ரியோ.

இருந்தாலும் முடிந்தவரை பிளான் பண்ணி பண்ணனும் படத்தை தியேட்டரில் வெளியிடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறாராம். ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top