Connect with us
Cinemapettai

Cinemapettai

ரம்யாவை ரியோக்கு எதிராக திருப்பி விட்டு வேடிக்கை பார்த்த சனம்.. குலுங்க குலுங்க சிரித்த பாலா, ஷிவானி!

sanam-shetty-big-boss

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரம்யாவை ரியோக்கு எதிராக திருப்பி விட்டு வேடிக்கை பார்த்த சனம்.. குலுங்க குலுங்க சிரித்த பாலா, ஷிவானி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி  தன்னுடைய விறுவிறுப்பை முழுவீச்சில் காட்டிக் கொண்டிருக்கிறது. அதற்காக இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் கால்சென்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டாஸ் கொடுக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே பல விவாதங்கள் பிக்பாஸ் வீட்டில் நடந்தேறி வருகின்றன.

இந்த நிலையில் சனம் ஷெட்டியின் தூண்டுதலால் ரம்யா பாண்டியன் கொந்தளித்து ரியோவை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினது பிக்பாஸ் ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது சனம் ரம்யா பாண்டியனிடம் வந்து, ‘நீங்கதான குக்கிங் டீம் கேப்டன். அந்த டீமில் இருந்த அனிதாவை மாற்றியது ஏன்? என்று  சொல்லுங்கள்’ என கேட்டார். இதனைக்கேட்ட ரம்யா, ‘அப்படியா அனிதாவ  குக்கிங் டீம்ல இருந்து மாத்திட்டாங்களா? யார் மாற்றினார்? ஏன் மாற்றினார்?’ என்று கேட்டார்.

மேலும் ரியோ தான் அனிதாவை மாற்றினார் என்பதைக் கேள்விப்பட்ட ரம்யா கொந்தளித்து எழுந்தார். அதுமட்டுமில்லாமல், ‘குக்கிங் தெரியாதவர்களை டீமில் போட்டால்தான் ஆன் டைமுக்கு சாப்பாடு வரும்’ என்று ரியோ கூறியதாக ரம்யாவிடம் சொன்னார் அனிதா.

இதைப்பற்றி ரியோவிடம், ‘உங்க லாஜிக் எனக்கு புரியல. சமைக்க தெரியாதவங்கள டீமில போட்டா எப்படி ஆன் டைமுக்கு சாப்பாடு வரும்?’ என்று லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார் ரம்யா.

இதற்கு ரியோ, ‘சமைக்கத் தெரியாதவர்கள் சீக்கிரம் கத்துப்பாங்க அதுக்காக தான் போட்டேன்.. உன்னை தனியா போடல. அர்ச்சனா தான் ஹெல்ப் பண்றாங்களே’ எனக்கூற, எரிச்சல் அடைந்தார் ரம்யா.

மேலும் ரம்யா, ‘அர்ச்சனா ரெசிபி  சொல்றாங்க. வேற என்ன ஹெல்ப் பண்றாங்க? நான் பிக் பாஸ் வீட்டுக்கு சமைக்க வரல. நீங்க என்ன கேட்டு முடிவு பண்ணி இருக்கணும்’ என்று அடுக்கடுக்காக  பேச விழிபிதுங்கி நின்றார் ரியோ.

இறுதியாக ரியோ, ‘உன்கிட்ட கேட்காமல் முடிவு பண்ணதுக்கு சாரி’ என்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Rio

Rio

மேலும் ரியோ இவ்வாறு பிக்பாஸ் வீட்டிற்குள் பேவரிசம் காட்டுவது ரசிகர்கள் பலரை எரிச்சலடையச் செய்துள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top