பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் எனும் சீரியலில் நடித்த ரிந்தியா வெளியிட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் சீரியல் ரிந்தியா வில்லி கதாபாத்திரத்தில் நடித்த அனைத்து ரசிகர்களிடமும் பாராட்டை பெற்றார். இதில் விஜய்யின் நண்பரான சஞ்சீவ் கதாநாயகன் நடித்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

அதே தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு வரை வெற்றிகரமாக ஓடிய சீரியல் தான் ரன். இந்த சீரியலில் ரிந்தியா ஷாலினி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
இவர் நடித்த இரண்டு சீரியல்களுமே ரசிகர்களிடம் இன்றும் பேசப்பட்டு தான் வருகிறது. அந்த அளவிற்கு திருமதி செல்வம் சீரியலில் வில்லி கதாபாத்திரத்திலும், ரன் சீரியலில் மூத்த சகோதரி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

தற்போது இவர் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கிளாமர் உடன் சரக்கு அடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அடங்கப்பா இது என்னடா கொடுமையாக இருக்கு, விட்டா ஒரு புல் அடிப்பாங்க போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.
