உட்கட்சி பூசலால் உடையும் கூட்டணி.. கலக்கத்தில் எதிர்க்கட்சி!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி நிலவுமா? என்ற சந்தேகம் தற்போது எழத் தொடங்கிவிட்டது.

ஏனென்றால் கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதேபோல் கடந்த புதுச்சேரி சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

ஆனால் தற்போது புதுச்சேரியில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை கலைத்து விட்டு தனியாக போட்டியிட திட்டமிட்டுள்ளது. ஆகையால் புதுச்சேரியில் திமுகவின் முதல்வர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனை களத்தில் இறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஜான்குமார் திடீரென்று திமுகவில் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

DMK-congres-cinemapettai

எனவே காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசலில் தனக்கு சாதகமாக திமுக பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க முடிவெடுத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல்  புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்ட நிலையில், தமிழக அரசியலிலும் பிரதிபலிக்குமா? என்ற கேள்வி தற்போது எழத் தொடங்கிவிட்டது.

Advertisement Amazon Prime Banner