ப்ரித்வி ஷா நான் சொன்னதை செய்யவில்லை- மனம் திறந்த பாண்டிங்

21 வயதாகும் பிரித்வி ஷா இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் மிகவும் பிரபலம். வலதுகை ஓப்பனிங் பேட்ஸ்மேன். மும்பையை சேர்ந்த இவரை சச்சின் டெண்டுல்கருடன் பலரும் ஒப்பிடப்படுகிறார்கள். விராட் கோலி போலவே 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் தலைவர் மற்றும் கோப்பையை வென்றவர் இவர். அதிரடி பேட்டிங்குக்கு பெயர் போனவர்.

சமீபகாலமாக மனிதர் பார்ம் வுட்டில் உள்ளார். டெஸ்ட் டீம்மில் இவரது இடத்தை மயன்க் அகர்வால் மற்றும் ஷுப்மன் கில்லிடம் இழந்துவிட்டார். கடந்த ஐபிஎல் சீசனிலும் சொதப்பினார். ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடினார் ௦, 4 ரன்கள் எடுத்தார். எனினும் சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே போட்டியில் செம்ம பார்மில் காணப்பட்டார். 8 போட்டிகளில் 4 சதங்களுடன் 827 ரன்களை குவித்தார். விஜய் ஹசாரே தொடரின் ஒரு சீசனில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இவர் பற்றி டெல்லி காப்பிடல்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் பேசியுள்ளார்.

“கடந்த சீசனில் நான் அவருடன் நிறைய பேசினேன். அவரை புரிந்துக்கொண்டு சிறந்த பயிற்சி முறையை வழங்கி, அவரின் முழு திறனை கொண்டு வரவேண்டும் என நினைத்தேன்.

ஆனால் அவரது பாலிசி வேறுவிதமாக இருந்தது. போட்டியில் ரன் குவிக்காத சமயத்தில் நெட்ஸில் பேட்டிங் பயிற்சி எடுக்க மாட்டார். ரன்கள் குவிக்கும் சமயத்தில் அதிக நேரம் ப்ராக்டிஸ் செய்வார். நான்கு, ஐந்து போட்டிகளில் 10 க்கும் குறைவாக ரன்கள் தான் எடுத்தார். வா நாம் நெட்ஸ் சென்று சரி செய்வோம் என்றேன், ஆனால் என் கண்களை பார்த்து இன்று பேட்டிங் செய்ய விரும்பவில்லை என்றார். என்னால் எதுவும் செய்யமுடியவில்லை.

என்னுடைய ரோல் பயிற்சி கொடுப்பது. எதிர்பார்த்த பலன் கிடைக்காத பட்சத்தில் சவாலாக எடுத்து நல்ல பலனை கொடுக்க வேண்டும். ஆனால் அவர் பயிற்சி எடுக்கவில்லை, சீசன் இறுதியிலும் கூட ரன் குவிக்கவில்லை.

அவர் மாறியிருக்க கூடும். கடந்த சில மாதம் அதிகம் உழைத்திருப்பார், அவரது பாலிசியும் மாறியிருக்க கூடும். அவரிடம் இருந்து சிறந்த பேட்டிங் வெளிப்படும் பட்சத்தில் சூப்பர் ஸ்டார் வீரராக மாறக்கூடும். டெல்லி காப்பிடல்ஸ்க்கு மட்டுமன்றி இந்தியாவுக்காகவும் பல வருடம் ஆடும் திறன் கொண்டவர்.

prithvi shaw

டெண்டுல்கர் போன்றவர் தான் ஆனால் பலமாக பந்தை அடித்து ஆடுபவர். ஸ்பின் நன்றாகவும் ஆடுவார். இவரை போன்ற அதிக திறன் வாய்ந்த வீரரை நான் கிரிக்கெட்டில் அதிகம் பார்த்ததில்லை.” என சொல்லியுள்ளார்.

பாண்டிங் போன்ற ஜாம்பவான் சொன்னதை, ஷா மறுத்த இந்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரங்களில் ஹட் டாபிக் ஆக மாறியுள்ளது.