Sports | விளையாட்டு
ரிக்கி பாண்டிங் பார்த்து பதறிய நான்கு பௌலர்கள் யார் தெரியுமா? ஒரு இந்தியர் உள்ளார் லிஸ்டில்
ரிக்கி பாண்டிங் – ஆஸ்திரேலியாவின் தலை சிறந்த கேப்டன். ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் உலகளவில் ஆஸ்திரேலிய நாட்டு கொடியை உயர பறக்கவிட்டவர். இவர் விளையாடும் சமயத்தில் தனியே மற்றும் டீமாக செய்த சாதனைகள் ஏராளமோ ஏராளம்.
ஓய்வுக்கு பின் வர்ணனை செய்வது, டி 20 லீக்குகளில் கோச்சிங், பேட்டிங் கான்சல்டன்ட் என பல முகங்கள் உள்ளது இவருக்கு. இந்நிலையில் பிக் பஸ் லீக் போட்டி சமயத்தில் ரசிகர்களை ட்விட்டரில் கேள்வி கேட்க சொன்னார். அப்பொழுது ஒருவர் நீங்கள் எந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள தயங்குனீர்கள் என கேட்டார்.
அதற்கு பாண்டிங், “நான் பேட்டிங் புரிந்ததில் வாசிம் அக்ரம் மற்றும் கர்ட்லி அம்ப்ரோஸ் தான் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள். சோஹிப் அக்தர் அதிவேகமாக வீசக்கூடியவர் அனால் ஹர்பஜன் சிங் மற்றவரை விட என்னை அதிக முறை அவுட் ஆகியுள்ளார்.” என பதில் தந்தார்.
Wasim Akram and Curtly Ambrose were easily the best fast bowlers I've ever faced. Shoaib Akhtar clearly the quickest but Harbhajan Singh got me out more than anybody https://t.co/17bIbPD6H3
— Ricky Ponting AO (@RickyPonting) January 12, 2020
