Tamil Cinema News | சினிமா செய்திகள்
#Nivinpauly “ரிச்சி” டீசர் வெளியீடு
நிவின் பாலி நடிப்பில் உருவாகியிருக்கும் “ரிச்சி” படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகியுள்ளது.
கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, நட்டி (எ) நடராஜ், பிரகாஷ் ராஜ், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் “ரிச்சி”.
நேரம் படத்திற்கு பின்னர், நிவின் பாலி நடித்துள்ள நேரடித் தமிழ்ப்படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகிய சூப்பர் ஹிட் படமான “உலிடவாறு கண்டந்தே” எனும் படத்தின் ரீமேக் தான் “ரிச்சி”.
இந்நிலையில், நிவின் பாலி நடிப்பில் உருவாகியிருக்கும் “ரிச்சி” படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
