கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, நட்டி (எ) நடராஜ், பிரகாஷ் ராஜ், ஸ்ரத்தா ஸ்ரீநாத், பிரகாஷ் ராஜ், லட்சுமி பிரியா, ஜி.கே.ரெட்டி, முருகதாஸ், ராஜ்பரத், துளசி, இளங்கோ குமரவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் “ரிச்சி”. கடந்த 2014-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகிய சூப்பர் ஹிட் படமான “உலிடவாறு கண்டந்தே” எனும் படத்தின் ரீமேக் தான் ரிச்சி.

நேரம் படத்திற்கு பின்னர், நிவின் பாலி நடித்துள்ள நேரடித் தமிழ்ப்படம் ; என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை ஆனந்த் பையனூர், வினோத் ஷொர்ணூர் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். ‘குரங்கு பொம்மை’ படத்திற்கு இசை அமைத்த அஜனீஷ் லோகநாத் இசையமைத்துள்ளார் . டிசம்பர் 8-ஆம் தேதி வெளியாகிறது  ரிச்சி.