புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

அடேங்கப்பா.. இவ்வளவு கோடி சொத்தா.? அக்கினேனி, கபூர் குடும்பத்தை பின்னுக்கு தள்ளிய பணக்கார குடும்பம் எது தெரியுமா?

இந்திய சினிமாக்களை பொறுத்த வரையில், அதிக சொத்து வைத்திருப்பது இரண்டு குடும்பங்கள் தான். ஒன்று அக்கினேனி மற்றொன்று, கபூர் குடும்பம். ஆனால் இவர்களையே பின்னுக்கு தள்ளி ஒரு சினிமா குடும்பம் அதிக சொத்துமதிப்போடு உள்ளது. நம்மால் யோசித்து கூட பார்க்க முடியாத அளவிற்கு அவ்வளவு சொத்துக்களை குவித்து வைத்துள்ளது இந்த குடும்பம்.

இந்தியாவில் வர்த்தகம் முதல் அரசியல் வரை அனைத்து துறைகளிலும் குடும்ப வாரிசுகளின் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது. அந்தவகையில், சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல. நடிகர்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை தங்களது வாரிசுகளை சினிமா துறையில் களம் இறக்கி சினிமா குடும்பங்களாக மாறி விடுகின்றனர். சிம்பிளாக சொல்லவேண்டும் என்றால், நெபொடிசம் இல்லாத துறையே இல்லை.

இந்தியா முழுவதுமாக ஒவ்வொரு மொழி திரைப்படத்துறையிலும் சினிமா குடும்பங்கள் உள்ளன. இந்த சினிமா குடும்பங்களில் மிகவும் பணக்கார திரைப்பட குடும்பம் தெலுங்கு சினிமாவை சேர்ந்தது. அவர்களுக்கு பணம் ஒரு விஷயமே இல்லை என்று கூட சொல்லலாம்.

இந்த குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு, கபூர்கள் மற்றும் அக்கினேனிகளைக் காட்டிலும் அதிகமாகும். இந்த தெலுங்கு சினிமா குடும்பத்தில் 4 சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர். அது வேறு யாருமில்லை, தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்ப உறுப்பினர்கள்தான். அல்லு-கொனிடேலா குடும்பம் தான் நாட்டின் பணக்கார சினிமா குடும்பம்.

தெலுங்கு சினிமா துறையில் மெகா குடும்பம் என்ற அழைக்கப்படும் அல்லு- கொனிடேலா குடும்பத்தின் ஆதிக்கம் அதிகம். இந்த மெகா குடும்பம் இந்தியாவின் மிக முக்கியமான திரைப்பட குடும்பங்களில் ஒன்றாக உள்ளது. இவர் சொல்வது தான் சட்டம் என்று கூட சொல்லலாம். நகைச்சுவை நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவரான அல்லு ராமலிங்கய்யாவால் 1950ல் மெகா குடும்பம் உருவானது.

அவருடைய பிள்ளைகள் மூலம் தெலுங்கு சினிமாவில் இந்த குடும்பம் வலுவாக தடம்பதித்தது. அல்லு ராமலிங்கய்யாவின 4 பிள்ளைகளில், அரவிந்த் ஒரு திரைப்பட தயாரிப்பாளராக ஆனார். மகள் சுரேகா தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சிவீயை மணந்தார். அவர்களது வாரிசுகள் மூலம் தெலுங்கு சினிமாவுக்கு பல நட்சத்திரங்கள் கிடைத்தனர்.

உதாரணமாக ராம் சரண், அல்லு அர்ஜூன், நாகேந்திர பாபு, வருண் தேஜ் சாய் தரம் தேஜ் மற்றும் பல நடிகர்கள் தெலுங்கு சினிமாவுக்கு கிடைத்தனர். இந்த மெகா குடும்பத்தின் சொத்து 6000 கோடியாக உள்ளது. இதை கேட்டு ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

- Advertisement -spot_img

Trending News