ரிப்பன் நடிகையின் கவர்ச்சிப் படங்கள் திடீரென்று கோலிவுட் வட்டாரங்களில் வலம் வருகின்றன. அதற்கான காரணம் தெரியாமல் முழிக்கிறது கோலிவுட்.

ரிப்பன் கட்டி பாவாடை தாவணியில் அறிமுகமான நடிகை கவர்ச்சி காட்டாமல் ஹோம்லியாக மட்டுமே நடித்து வந்தார். அதனாலேயே என்னவோ வாய்ப்புகள் குறைந்துவிட்டன. இப்போதைக்கு காத்தாடி நடிகருடன் நடிக்கும் ஒரே ஒரு படம் மட்டும்தான் கையில் இருக்கிறது. அதுவும் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் வீட்டில் சும்மாதான் இருக்கிறார்.

இந்நிலையில் நடிகையின் பழைய ஆல்பம் என்று ஒரு கிளாமர் ஆல்பம் உலவுகிறது. அதைப் பார்த்தால் நடிக்க வந்த புதிதில் நடிகைக்கு எடுத்த டெஸ்ட் ஷூட் போல தெரிகிறது. நடிகையும் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார். ஒரு வாரமாக இது வலம் வரும் நிலையில் இதுகுறித்து கேட்டால் நடிகை மௌனத்தையே பதிலாகத் தருகிறார்.

உண்மையில் அது நடிகையா? இல்லை மார்ப்பிங்கா? வாய்ப்புக்காக நடிகையே பரப்பி விடுகிறாரா? என பல சந்தேகங்களுக்கு விடை தெரியாமல் விழிக்கிறது கோலிவுட்.