fbpx
Connect with us

Cinemapettai

கோடிகளில் தான் சம்பளம் வேண்டும் என அடம் பிடித்த நடிகை.. ஒழுங்கா ஓடிப்போயிரு என விரட்டியடித்த தயாரிப்பாளர்கள்

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema Kisu Kisu

கோடிகளில் தான் சம்பளம் வேண்டும் என அடம் பிடித்த நடிகை.. ஒழுங்கா ஓடிப்போயிரு என விரட்டியடித்த தயாரிப்பாளர்கள்

தமிழ்சினிமாவில் முதல் படத்திலேயே பெரிய அளவு பெயரையும் புகழையும் பெற்ற நடிகை தான் அந்த ரிப்பன் நடிகை. அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றார் அந்த நாயகி. வழக்கம்போல் வேலை முடிந்ததும் புத்தியை காட்டுவதைப் போல பிரபலமான உடன் சம்பளத்தை ஏற்ற ஆரம்பித்தார் அந்த நாயகி.

முதலில் கொடுத்ததை வாங்கிக் கொண்டு நடித்த முன்னணி நடிகை இவ்வளவு கொடுத்தால்தான் நடிப்பேன் என முரண்டு பிடிக்க ஆரம்பித்தார். அவரது நேரமோ என்னமோ அவரது நடிப்பில் படங்கள் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்தது. மேலும் ரசிகர்களும் அவரை பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை.

லட்சங்களில் இருந்து கோடிக்கு தாவிக் கொண்டிருந்த நடிகை ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகளே இல்லாமல் தடுமாறினார். அவரது சொந்த ஊரான அக்கட தேசத்தில் படவாய்ப்புகள் இல்லை. அக்கட தேசத்தில் அந்த நாயகி ஒரு கில்மா நாயகியாக வலம் வந்தார். ஏ சர்டிபிகேட் படங்களிலும் நடித்துள்ள அந்த நாயகி தமிழ் சினிமாவில் மட்டும்தான் இழுத்துப் போர்த்துக் கொண்டு நடித்தார்.

கவர்ச்சி காட்டினால், படங்கள் கிடைக்கும் என்று கூறினாலும் காட்ட மாட்டேன் என்று அடம் பிடித்தாராம் அந்த நாயகி. நீ காட்டுனது போதும், கிளம்பு என துரத்தி விட்டார்கள் நம் ஆட்கள். இந்நிலையில் அந்த நாயகியின் முதல் பட ஹீரோ தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வளர்ந்து கொண்டிருக்கும் போது மீண்டும் அந்த நாயகனுக்கு வலை வீசியுள்ளார் அந்த நாயகி.

ஆனால் அந்த ஹீரோ கொஞ்சமும் கண்டுகொள்ளாததால் தற்போது என்ன செய்வதென்றே தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். மேலும் இன்ஸ்டாகிராமில் போட்டோ போடுங்க, ஏதாவது வாய்ப்பு கிடைக்க சான்ஸ் இருக்கு என அந்த ஹீரோ ஐடியா கொடுத்தாராம்.

அதன்படி தற்போது கொஞ்சம் கிளாமரா போட்டோ ஷூட் நடத்த ரெடியாகி விட்டாராம். ஆனால் தயாரிப்பாளர்களை பகைத்துக்கொண்ட அந்தநாயகி மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருவது கஷ்டம்தான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Continue Reading
To Top