ஸ்ரீ ரெட்டி

ஆந்திராவில் சின்னத்திரை தொகுப்பாளர் மற்றும் நடிகையாக வலம் வந்தவர்.இவர் சில நாட்களுக்கு முன் தனக்கு சினிமா வாய்ப்பு வழங்குவதாக ஆசை வார்த்தை கூறி பலர் தன்னை படுக்கைக்கு அழைத்து ஏமாற்றி விட்டார்கள் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். பின்னர் ஒருவர் பின் ஒருவராக தகவலும் வெளியிட்டார். மேலும் சமீபத்தில் நடிகர் சங்கம் தனக்கு அடையாள அட்டை வழங்க மறுப்பதாகவும் குற்றம்சாட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். ஒரு புறம் குவியும் எதிர்ப்பு மறுபுறம் பெருகும் ஆதரவு என உள்ளது இவர் நிலை.

Sree Reddy
ராம் கோபால் வர்மா

இவரும் சர்ச்சையும் உடன் பிறவா சகோதரர்கள் தான். மனிதர் மனதில் பட்டத்தை பளிச்சென்று பேசுபவர். உலகமே எதிர்த்து வந்தாலும், தான் சொல்வது சரியன்று வாதிடுபவர்.

Ram_Gopal_Varma

ஆரம்பம் முதலே ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவாக டீவீட்டுக்களை இவர் பதிவிட்டார்.

” இன்று ஸ்ரீரெடிக்கு எதிராக பலர் இருக்கலாம், எனினும் அவர் தன்னை சமூக ஆர்வலராக நிலை நிறுத்திக்கொள்ளலாம். பழசு எப்படியோ போகட்டும்.மனம் மாற்றம் எப்பொழுது வேணாலும் நிகழலாம்.”

“அசோகர் கூட போரில் பலரை கொன்று குவித்தவர் தான், எனினும் பின்பு மனம் மாறி பல லட்சம் மக்களை காப்பாத்தி ஆபத்பாந்தவனாக இருந்தவர். என்னை பொறுத்தவரை ஸ்ரீரெட்டியும் அவரைபோன்றவர் தான்.” என்று கூறியுள்ளார்.