Connect with us
Cinemapettai

Cinemapettai

சிகப்பு ரோஜாக்கள், குணா போலவே இந்த சைக்கோ..  திரைவிமர்சனம்

Reviews | விமர்சனங்கள்

சிகப்பு ரோஜாக்கள், குணா போலவே இந்த சைக்கோ..  திரைவிமர்சனம்

இயக்குனர் மிஷ்கின் மற்றும் இசைஞானி இளையராஜா ஹீரோக்களாக, ஒளிப்பதிவாளர் தன்வீர் மிர், எடிட்டர் அருண் குமார் ஹீரோயின்களாக அமையப்பட்ட படமே இந்த சைக்கோ. இப்படத்திற்கு பக்கபலமாக துணை நின்றவர்களே உதயநிதி, அதிதி ராவ் ஹயாத்ரி, நித்யா மேனன், ராஜ்குமார் பிச்சுமணி, சிங்கம் புலி, ரேணுகா மற்றும் ராம்.

கதை – தொடர்ச்சியாக 13 பெண்களை கொலை செய்து, உடலை மட்டும் கோயமபத்தூரின் பல பகுதிகளில் வைக்கும் சீரியல் கில்லர் ஒருபுறம். முதல் பிரேம்மிலேயே கொலைகாரனை காட்டுவது நல்ல ட்விஸ்ட்) மறுபுறம் கண் தெரியாத இசை பின்புலம் உள்ள உதய், ரேடியோ ஜாக்கி அதிதியை ஒரு தலையாக பின் தொடர்ந்து காதலிக்கிறார். காதலி வில்லனால் கடத்தப்ப போலீஸ் பெரிதாக உதவாதத்தால், முன்னாள் போலீஸ் – இன்று வீல் சேரில் இருக்கும் நித்யா மேனனிடம் உதவி கோருகிறார்.

எவ்வாறு தன் காதலியை கண்டுபிடிக்கிறார், அவள் உயிரை காப்பாற்ற முடிந்ததா ? ஹீரோ – வில்லன் என்னவாகிறார்கள் என்பதே மீதி கதை.

சினிமாபேட்டை அலசல் – A செர்டிபிகேட் படம். கட்டாயம் பலவீனமான பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் தவிர்க்க வேண்டிய படம். கௌதம புத்தர், அவர் சீடனாக மாறிய அங்குலிமாலா என சில வரலாற்று பெயர்கள் கதாபாத்திர அமைப்பில் உள்ளது. நிதானமாக செல்லும் சஸ்பென்ஸ் திரில்லர் இப்படம். இரண்டாம் பாதியில் கிளைமாக்ஸ் நெருங்கும் சமயத்தில் பல இடங்களில் இல்லுமினாட்டி ரெபெர்னஸ் அங்கங்கே விட்டு செல்கிறார் இயக்குனர். கதையாக இவர் சொல்வதை விட அங்கங்கு குறிப்புகளாக (metaphor) விட்டு செல்வதே அதிகம். அந்தளவுக்கு  எழுத்தில், மேக்கிங்கில் அசத்தியுள்ளார் மிஷ்கின்.

ஒரு புள்ளி அல்லது சம்பவம் போதும் ஒருவன் சிறுவயதில் மனநலம் பாதிப்படைய, அது வாழ்நாள் முழுவதும் தொடரும். அது அவனை எப்படி வேண்டுமானாலும் மாற்றும் என்பதனை இப்படத்தில் சொல்லியுள்ளார். சாதாரண மனிதர்களை விட ஊனமுற்றவர்களின் மனது, மூளை அதிக ஸ்பீடில் வேலை செய்யும், அதன் படி தான் போலீசால் முடியாததை சாத்தியம் ஆக்க முடிகிறது உதய் மற்றும் நித்யாவால். அதிதி அம்மா பற்றிய ரெபர்ன்ஸ் எதுவும் கிடையாது, அப்பா மட்டுமே ஆரம்பத்தில் காமிக்க, இறுதியில் வில்லனை பற்றிய அவளின் நிலைப்பாட்டை நம்மாலும் ஏன் என புரிந்துகொள்ள முடிகிறது.

சினிமாபேட்டை வெர்டிக்ட் – சொல்லாமல் பல விஷயங்களை குறியீடாக விட்டு செல்வது இயக்குனரின் ஸ்டைல். படம் பார்ப்பவர் அவர் அவர் புரிதலுக்கு ஏற்ப உருவகித்துக்க வேண்டிய படம் தான் இந்த psycho . ஒரு சாராரின் அதீத பாராட்டை பெரும் . அதே சமயத்தில் என்ன தான்யா சொல்ல வரீர், எதுக்கு இம்புட்டு குழப்பம், என்ன லாஜிக் இது என்றும் ஒரு சிலர் சலித்துக் கொள்வதும் நேரிடும்.

ஆக மொத்தத்தில் மிஷ்கினின் உலகை எதிர்ப்பது சென்றால் திருப்தியுடன் திரும்பி வரவைக்கும் படம் தான் இது.

உலக சினிமா ரசிகர்களுக்கான ரேட்டிங் – 3.5 / 5

சாமானியனுக்கான ரேட்டிங் – 3 /5

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top