Tamil Cinema News | சினிமா செய்திகள்
கமலின் புன்னகை மன்னன் படத்தில் ரேவதிக்கு பதில் முதலில் இவரா? அதுக்கெல்லாம் நீங்க சரிபட்டு வர மாட்டீங்க
Published on
கமல்ஹாசன் திரைப்படங்களில் பெரும்பாலான திரைப்படங்கள் காவியமாக அமைந்தது.
அப்படி ஒரு படம் தான் 1984 ஆம் ஆண்டு கமலஹாசன், ரேவதி, ரேகா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் புன்னகை மன்னன்.
புன்னகை மன்னன் படத்தில் நடித்த அனைத்து நடிகர்கள் மற்றும் நடிகைகளின் கதாபாத்திரங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இருந்தாலும் கமலஹாசன் தன்னிடம் கூறாமல் தனக்கு உதட்டு முத்தம் கொடுத்து விட்டதாக ரேகா சமீபத்தில்கூட பிரச்சனையை கிளப்பி இருந்தார்.
புன்னகை மன்னன் படத்தில் ரேவதி கதாபாத்திரத்திற்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தவர் இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜின் மனைவி பூர்ணிமா தானாம்.
பூர்ணிமாவும் அந்த காலகட்டங்களில் பெரிய நடிகையாக வலம் வந்தார். குறிப்பாக நடிகர் மோகனுடன் அதிக படங்களில் நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

punnagai-mannan
