Entertainment | பொழுதுபோக்கு
இந்தியர்களுக்கே தடை விதிக்கப்பட்ட 7 இந்திய நகரங்கள்…
இந்தியர்கள் செல்ல சில வெளிநாடுகளில் தடை விதிக்கப்பட்டு இருப்பதை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். ஆனால், இந்தியாவில் உள்ள சில இடங்களுக்கே இந்தியர்கள் வருவதற்கு தடா இருக்கிறது தெரியுமா?
வெளிநாட்டினருக்கான பீச், கோவா: நமது இளைஞர்களின் பேவரிட்டான சுற்றுலா தளம் என்றால் அது கோவா தான். அதன் சூழல் பலருக்கு ரீலாக்ஸை தருவதால் வாழ்க்கையில் ஒருமுறையாவது கோவா செல்வதை பலர் குறிக்கோளாகவே வைத்து சுற்றுகிறார்கள். ஆனால், கோவாவில் இருக்கும் ஒரு சில பீச்சுக்கு செல்ல வெளிநாட்டினர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கு, அங்குள்ள உணவக உரிமையாளர்கள், வெளிநாட்டினர் நீச்சல் உடையில் நிம்மதியாக நேரத்தை செலவிடுவார்கள். அதனால் சில பகுதிகள் அவர்களுக்காக ஒதுக்கப்படுகிறது என்றனர்.
உனொ-இன் ஹோட்டல், பெங்களூர்:
பெங்களூர் நகரத்தில் ஜப்பானியர்களுக்காவே 2012ம் ஆண்டு பிரத்யேகமாக திறக்கப்பட்டது இந்த உனோ-இன் ஹோட்டல். ஆனால், இந்த ஹோட்டலால் மக்களிடம் இனவாத பாகுபாடு அதிகரிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதை தொடர்ந்து, பெங்களூர் மாநகரம் இந்த ஹோட்டலை 2014ல் மூடியது.வட செண்டினல் தீவு, அந்தமான்:
இந்த தீவு அந்தமானின் ஒரு பகுதி தான். முதன்மையான தீவில் இருந்து பிரிந்து இருக்கிறது. இங்கு எந்த சுற்றுலா பயணிகளுக்கும், மீனவர்களுக்கும் அனுமதி இல்லை. காரணம் அங்கு வாழும் செண்டிநீஸ் பழங்குடியினர் யாரையும் அனுமதிப்பது இல்லை.
லட்சத்தீவுக் குழுவின் சில தீவுகள்:
லட்சத்தீவை சுற்று அமைந்துள்ள சில தீவுகளில் வெளிநாட்டினருக்கு மட்டுமல்லாமல் இந்தியர்களுக்கும் அனுமதி தேவை. எனினும், பங்காரம், அகட்டி மற்றும் கட்மெட் தீவுகளை பார்வையிட வெளிநாட்டினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அமினி மற்றும் மினிகோய் தீவுகளை இந்தியர்கள் மட்டும் பார்க்கலாம்.
ப்ரீகசோல் கஃபே, கசோல்:
ஹிமாச்சலப் பிரதேசத்தில் கசோல் பகுதியில் உள்ள இந்த ரெஸ்டாரெண்டில் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை. சமீபத்தில் இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவரை அனுமதிக்காத அந்த ரெஸ்டாரெண்டின் உரிமையாளர், இஸ்ரேலைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளரை வரவேற்றார். இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியது.
வெளிநாட்டினர் மட்டுமே, புதுச்சேரி:
கோவா போன்றே இங்கு உள்ள சில உணவக நிர்வாகம் சில பீச்களில் வெளிநாட்டினரை மட்டுமே அனுமதிக்கிறது.
சென்னை ஹோட்டல்:
அங்க இருக்கு இங்க இருக்குனு இல்ல இதே நடைமுறையில் நம்ம சென்னையிலும் ஒரு ஹோட்டல் இருக்கு. இதில், தங்கும் வாடிக்கையாளர்கள் வெளிநாட்டு பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும். ஆனால், இங்கு இந்தியர்கள் வரக்கூடாது என்ற எந்த சட்டமும் இல்லை. ஆனால், இங்கு தங்க வேண்டும் என்றால் வெளிநாட்டு பாஸ்போர்ட் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். நம்ம சென்னை அதனால் பேரு வேணாமே!
