ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசின் இந்த புத்தாண்டின் முதல் சட்டசபை கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை புதுச்சேரி சட்டசபை மீண்டும் கூடியது. அப்போது, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை நாடாளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும் காளைகளை காட்சி விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெற்ற போது, புதுச்சேரியிலும் போராட்டங்கள் வெடித்தன. இதனைத் தொடர்ந்து சட்டசபையில் காங்கிரஸ் அரசு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.