Connect with us
Cinemapettai

Cinemapettai

TTV-Dinakaran_eps

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரு நாளைக்கு எத்தனை உத்தரவுடா போடுவே: தினகரன் அட்டகாசம்: ராஜினாமா எடப்பாடி

சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரனின் அடுத்தடுத்த கட்டளைகளால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மிகவும் கடுப்பாகியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா மறைந்த போது சசிகலாவின் விசுவாசியான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க முயற்சித்தார். ஆனால் மத்திய அரசின் நெருக்கடியால் ஓபிஎஸ் முதல்வரானார்.

அதன் பின் தானே முதல்வராக முயற்சித்த சசிகலா, சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றார். அப்போது பழனிச்சாமியை முதல்வராக நியமித்ததோடு, அதிமுக தலைமையை அக்கா மகன் டிடிவி தினகரனிடம் அளித்தார். சசிகலா சிறைக்கு சென்ற பின், அதிமுகவின் துணை பொதுச்செயலாளரான தினகரன், ஒட்டு மொத்த கட்சி மற்றும் ஆட்சியை தன் கட்டுப்பாட்டி வைக்க முயற்சி செய்து வருகிறாராம்.

ஒரு நாளைக்கு இருபது உத்தரவுகள் போடுகிறார் தினகரன். நினைத்த அதிகாரிகளை உடனே மாற்று என்கிறார். மரியாதைக் குறைவாகவும் அழைக்கிறார்.கட்சி தலைமையில் உள்ள தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இதை செய்யுங்கள், இப்படி செய்யுங்கள் என கட்டுப்படுத்தி வருகின்றாராம்.

இது தவிர நடராஜன், ராவணன், வெங்கடேஷ், என அனைவரும் உத்தரவு போடுகிறார்கள். இதனால் மிகவும் கடுப்பாகியுள்ள எடப்பாடி பழனிச்சாமி, நான் சசிகலாவுக்கு மட்டும் தான் விசுவாசி.

அதனால் அவரது குடும்பமே என்னை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புவதும், அடிமையாக்க துடிப்பதும் சரியா? என கடுகடு வென உள்ளார். இதை கேட்டகவும் செய்து விட்டார்.

சசிகலாவின் உத்தரவால் ஓபிஎஸ் தன் பதவியை ராஜினாமா செய்ததைப் போல, தற்போது தினகரனின் அதீத ஆதிக்கத்தால் எடப்பாடி பழனிச்சாமி தன் முதல்வர் பதவியை விரைவில் துறப்பார் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படி ஒரு பினாமி ஆட்சி தேவையா என்கிறார்கள் மக்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top