மூடநம்பிக்கையில் முத்தி போன திருப்பதி தேவஸ்தானம்.. கொரோனாக்கு கைதட்ட சொன்ன மாதிரி லட்டுக்கு செய்யும் பரிகாரம்

Tripati: அண்மையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் பலரையும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. அதாவது திருப்பதி லட்டு பிரதேசத்தில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்தது.

நெய்யின் விலை ஜாஸ்தியாக இருப்பதால் மாட்டு கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் ஆகியவற்றிலிருந்து நெய் தயாரிக்கப்பட்டு அதை லட்டுக்கு பயன்படுத்தி உள்ளதாக கண்டறியப்பட்டது. இந்த செய்தியால் பக்தர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

இதனால் கோயிலின் புனிதம் கெட்டு விட்டதாக மூன்று நாட்கள் சிறப்பு யாகங்கள் செய்ய கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது. அதேபோல் பவன் கல்யாண் போன்ற பிரபலங்கள் 11 நாள் விரதத்தை மேற்கொள்வதாக அறிவித்திருந்தனர்.

திருப்பதி தேவஸ்தானம் வைத்த வேண்டுகோள்

ஆனால் இப்போது திருப்பதி தேவஸ்தானம் மூடநம்பிக்கையை பரப்பும் வகையில் இன்று மாலை 6 மணிக்கு அனைவரும் வீட்டில் விளக்கேற்ற வேண்டுகோள் வைத்துள்ளனர். அதோடு ஓம் நமோ வெங்கடேசாய, ஓம் நமோ நாராயணா, ஓம் நமோ பகவதே நமஹ மந்திரத்தையும் படிக்க சொல்லி உள்ளனர்.

அப்படி விளக்கு ஏற்றினால் கலப்பட நெய் மூலம் தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதத்தை சாப்பிட்டவர்களின் தோஷம் விலகும் என்றும் கூறியுள்ளனர். கோவிட் தொற்றால் பல உயிர்கள் இறந்தபோது இரவு லைட்டை 5 நிமிடம் அனைத்து விட்டு கைதட்டினால் கொரோனா போய்விடும் என்று மூடநம்பிக்கையை பரப்பினார்கள்.

அதேபோல் தான் இப்போது வீட்டில் விளக்கேற்றினால் தோஷம் விலகிவிடும் என்று சொன்னால் வேடிக்கையாக இருக்கிறது. இவ்வாறு மூடநம்பிக்கையில் திருப்பதி தேவஸ்தானம் முற்றிப்போய் உள்ளது.

திருப்பதியில் லட்டில் கலந்த கலப்படம்

- Advertisement -spot_img

Trending News