Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரு பாலியல் தொழிலாளியின் கோரிக்கை
வங்கதேசத்திலிருந்து ஏமாற்றபட்டு இந்தியாவில் பாலியல் தொழிலில் தள்ளபட்ட பெண், செல்லாத தனது பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி தர வேண்டும் என இந்திய பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
வங்கதேசத்தை சேர்ந்தவர் ஆயிஷா. இவர் அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் மாதம் ஒன்பதாயிரம் சம்பளத்தில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், அவருடன் பணியாற்றிய தொழிலாளி, ஆயிஷாவுக்கு அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்தார்.
மும்பைக்கு அழைத்து வரப்பட்ட ஆயிஷா அங்கு பாலியல் தொழில் செய்யும் பெண்ணிடம் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்கபட்டுள்ளார்.
பின்னர், பல்வேறு நகரங்களுக்கு பாலியல் தொழில் செய்ய அழைத்து செல்லப்பட்ட ஆயிஷா கடைசியாக புனே வந்தடைந்தார்.
பின்னர், ஆயிஷா தங்கியிருந்த இடத்தில் காவல் துறை அதிரடி சோதனை நடத்த அங்கிருந்து மீட்கபட்ட ஆயிஷா தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கபட்டார்.
பொலிஸ் விசாரணை முடிந்துள்ள நிலையில் ஆயிஷா தனது சொந்த நாட்டுக்கு செல்லும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தன்னிடம் விபசாரத்துக்கு வந்த நபர்கள் கொடுத்த டிப்ஸ் பணத்தை ஆயிஷா சேர்த்து வைத்துள்ளார்.
அது எல்லாமே இந்திய அரசு தடை செய்த பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளாகும். அவர் 13000 ரூபாய் வரை வைத்துள்ளார்.
இதை, மாற்றி தற்போது செல்லக்கூடிய நோட்டுகளாக தனக்கு தரவேண்டும் என ஆயிஷா, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதம் தொண்டு நிறுவனம் மூலம் மோடி மற்றும் சுஷ்மா சுவராஜின் டிவிட்டர் கணக்கில் டேக் செய்யப்பட்டு பகிரப்பட்டுள்ளது.
இருவரும் அதை பார்த்து ஆயிஷாவுக்கு உதவுவார்கள் என அவர் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்.
தான் இங்கு அனுபவித்த மொத்த கதையையும் அவர் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.
இதனிடையில், ஆயிஷாவை விபசார விடுதியிலிருந்து மீட்ட பொலிஸ் அதிகாரி ரஷ்மி சுக்லா, இந்தக் கடிதத்தை பார்த்து மத்திய அரசு ஏதாவது செய்தால் நல்லது.
இல்லாவிட்டாலும், ஆயிஷா வங்கதேசம் திரும்பிச் செல்வதற்கு முன்னதாக அவருக்கு நிதியுதவி செய்வதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து வருகிறேன் என கூறியுள்ளார்.
Urgent appeal from a Bangladeshi girl. Sir @narendramodi ji , @SushmaSwaraj ji seeking your intervention ASAP. pic.twitter.com/MqT4NQs4o5
— Rescue Foundation (@ResQ_Foundation) May 3, 2017
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
