fbpx
Connect with us

அஞ்சு பைசா கொடுக்க வக்கு இல்ல விஜய் பத்தி பேசுறியா? சுரேஷ் காமாட்சி கிழித்தது யாரை தெரியுமா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஞ்சு பைசா கொடுக்க வக்கு இல்ல விஜய் பத்தி பேசுறியா? சுரேஷ் காமாட்சி கிழித்தது யாரை தெரியுமா

மாஸ்டர் படப்பிடிப்பின்போது தளபதி விஜயின் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது, இதை தற்போது வரை அரசியல் செய்வதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் துக்லக் ரிப்போர்ட்டரான குருமூர்த்தி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

அதாவது நடிகர் விஜய் மிகவும் தாமதமாக கொரோனாவிற்கு நிதியுதவி அளித்ததற்கு என்ன காரணம் என்பதற்கு அவர் கூறிய பதில் என்னவென்றால், “வருமானவரித்துறையினர் வாரி சுருட்டிக் கொண்டு போன பிறகு அங்குமிங்கும் சிதறி இருந்த பணத்தை சேர்த்து வைத்து கொடுப்பதற்கு நேரம் தேவை இல்லையா” என்று நக்கலாக பதில் அளித்துள்ளார்.

இந்த பதிலுக்கு பல பிரபலங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மாநாடு இயக்குனர் சுரேஷ் காமாட்சி கூறுகையில் “அரசியல்வாதிகளை கைக்குள் போட்டு சம்பாத்தியத்தில் இருந்து இதுவரை கொரோனா நிதிக்காக அஞ்சு பைசா கூடுக்கத குருமூர்த்தி தன்னுடைய இக்கட்டான சூழ்நிலையிலும் மனிதநேயமுடன் உதவியதை நக்கலடித்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

suresh-kamatchi-cinemapettai-1

suresh-kamatchi-cinemapettai-1

ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் தனக்கு எவ்வளவு பிரச்சனைகள் சிரமங்கள் இருந்தும் தன் மக்களுக்காக கொடுப்பதை ஒரு நாளும் மறந்ததில்லை தளபதி. அதேபோல் வருமான வரித் துறைக்கு கடிதம் எழுதி முறையாக அனுமதி வாங்கி நிதி கொடுக்க காலதாமதம் ஆகிவிட்டது இதுதான் நிதர்சனமான உண்மை.

இதனால் குருமூர்த்திக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது தளபதி விஜய்க்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர், சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி.

Continue Reading
To Top