fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ரேணிகுண்டா படத்தில் நடித்த சின்ன பொண்ணா இது! சனுஷா நல்லா புசுபுசுன்னு ஆகிட்டாங்க.. சோ க்யூட்!

renugunta-actress-sanusha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரேணிகுண்டா படத்தில் நடித்த சின்ன பொண்ணா இது! சனுஷா நல்லா புசுபுசுன்னு ஆகிட்டாங்க.. சோ க்யூட்!

2009 ஆம் ஆண்டு வெளிவந்த ரேணிகுண்டா படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்து அனைவரது நெஞ்சங்களிலும் கொள்ளை கொண்டவர் சனுஷா(Sanusha). அவர் அதற்கு முன்னே விக்ரம் நடித்த காசி படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் வருவார்.

பீமா படத்திலும் திரிஷாவுக்கு தங்கச்சியாக நடித்திருப்பார். ரேணிகுண்டா படத்தை தொடர்ந்து நந்தினி மற்றும் விமல் நடித்த எத்தன் ஆகிய படங்களிலும் கதாநாயகியாக தொடர்ந்தார். மலையாள நடிகையான இவர் சிறுவயதிலிருந்தே திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

எத்தன் படத்திற்கு பிறகு கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகளில் ஒருவராக வலம்வந்தார்.

இறுதியாக சசிகுமார் நடித்த கொடிவீரன் திரைப்படத்தில் சசிகுமாரின் தங்கச்சியாக நடித்து அனைவரது உள்ளங்களிலும் கவர்ந்த இவரது தற்போதைய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சாதாரணமாகவே சற்று பப்ளி ஆக இருக்கும் சனுஷா ஊரடங்கு உத்தரவு காரணமாக இன்னும் உடல் எடையை கூட்டி விட்டார் போல.

தான் வளர்க்கும் நாய்க்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படம் க்யூட்டாக வைரலாகி வருகிறது.

sanusha-cinemapettai

sanusha-cinemapettai

Continue Reading
To Top