ரஜினி முருகன் வெற்றிப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திக்கேயன் அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் ரெமோ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மீண்டும் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

இப்படத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, அனிருத், ஹாலிவுட் மேக்கப் கலைஞர் சீன் பூட் என மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வருகிறார்கள்

இப்படத்தின் வெளியீட்டு தேதி டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகைகள் விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 7ம் தேதி ரெமோ படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.