ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துவரும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் யூ டியூப் பிரபலம் அர்ஜுன் கனுங்கா இப்படத்தின் மூலம் தென்னகத்தில் பாடகராக அறிமுகமாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.