fbpx
Connect with us

ரெமோ படத்தை வாங்கிய பாகுபலி, தெறி பட விநியோகஸ்தர்

sivakarthikeyan-remo-stills

ரெமோ படத்தை வாங்கிய பாகுபலி, தெறி பட விநியோகஸ்தர்

தெலுங்கு சினிமா உலகில் பிரபல விநியோகஸ்தராக திகழ்பவர் தில் ராஜு. இவர் கடந்த வருடம் வெளிவந்த பிரம்மாண்ட படமான ‘பாகுபலி’ படத்தை வாங்கி தெலுங்கு உலகில் வெளியிட்டவர். அதுமட்டுமில்லாமல் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘தெறி’ படத்தையும் வாங்கி வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற அக்டோபர் 7-ந் தேதி வெளியாகவிருக்கும் ‘ரெமோ’ படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையை தில் ராஜு வாங்கியுள்ளார். தரமான படங்களை வாங்கி வெளியிட்டு வரும் தில் ராஜு, தற்போது ‘ரெமோ’ படத்தையும் வாங்கி வெளியிடுவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

‘ரெமோ’ படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், சவுண்ட் என்ஜினியர் ரசூல் பூக்குட்டி, மேக்கப் கலைஞர் சீன் பூட், இசையமைப்பாளர் அனிருத் என பிரம்மாண்ட தொழில்நுட்ப கலைஞர்களும் இதில் பணியாற்றியுள்ளனர். 24AM ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top