fbpx
Connect with us

Cinemapettai

ரெமோங்கறது இங்கிலீஷ்னு யாரு சொன்னா? மாறாதாம் தலைப்பு!

sivakarthikeyan remo

ரெமோங்கறது இங்கிலீஷ்னு யாரு சொன்னா? மாறாதாம் தலைப்பு!

கபாலிக்குப் பின் அடுத்த யானை வெடி, சிவகார்த்திகேயனின் ரெமோ-தான்! இதில் நர்ஸ் வேடத்தில் நடித்து பசங்களின் மனசில் பபுள்கம்மாக ஓட்டிக் கொள்கிற அளவுக்கு நடித்திருக்கிறாராம் சிவா. அதுவும் இந்த பெண் வேடம், ஏதோ நாலு சீன் மட்டும் வந்து போகிற சமாச்சாரமல்ல. படத்தில் பெரும் பகுதியே நர்சக்காதான்! இந்தப்படத்தின் வியாபாரம், மட்டும் வெளிநாட்டு ரிலீஸ் விஷயத்தில் முன்னெச்சரிக்கை என்று தமிழ்சினிமாவுக்கே புதுப்பாதை காட்டிக் கொண்டிருக்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.

இந்த நேரத்தில்தான் பொல்லாத செய்தி ஒன்றும் கோடம்பாக்கத்தை ரவுண்ட் அடித்து வருகிறது. அதாவது ‘ரெமோ’ என்கிற தலைப்பு ஆங்கிலம் என்பதால் படத்திற்கு வரிவிலக்கு கிடைக்காது. அதனால் ‘ரெங்கநாதன் என்கிற மோகனா’ என்று தலைப்பை மாற்றப் போகிறார்கள். இப்படி ஒரே நாளில் தீயாய் பரவிய செய்தி, சிவகார்த்திகேயனின் ரசிகர்களை குழப்பிவிட, சம்பந்தப்பட்ட ரெமோ குழுவிடமிருந்து ஒரு விளக்கமும் வரவில்லை.

அதற்காக சும்மாயிருக்க முடியாதல்லவா? சிவகார்த்திகேயனின் 24 ஏஎம் ஸ்டூடியோஸ் அலுவலகத்தை தொடர்பு கொண்டோம். இந்த விஷயத்தை முற்றிலும் மறுத்தார்கள் அங்கே.

“ரெமோ என்பது பெயர்ச்சொல்தான். கிறிஸ்துவ சமூகத்தில் ரெமோ என்கிற பெயர் பிரசித்தம். அப்படிதான் இந்த படத்தில் வரும் கேரக்டரின் பெயரும். இதற்கு முன்பு சிவாஜி, ரோமியோ ஜூலியட் என்று படங்கள் வந்ததல்லவா? அது போலதான் இதையும் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றார்கள்.

ஆமாம்… கடைசியா என்னதான் சொல்றாங்க? “தலைப்பு மாறாது. மாறாது. மாறவே மாறாது!”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top