ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால் வழக்கம்போல இந்த படமும் ஹாலிவுட் படத்தின் காப்பி என நெட்டிசன்கள் தற்போது கூற ஆரம்பித்துள்ளார்கள்.

1982-ம் ஆண்டு வெளியான Tootsie எனும் ஹாலிவுட் படத்தின் தழுவல்தான் ரெமோ என சொல்லப்படுகிறது. இந்த Tootsie பட டிரைலரை பார்க்கும்போது கிட்டத்தட்ட ரெமோ போலத்தான் உள்ளது.

மையக்கருவை எடுத்துக்கொண்டு அதையே சிவகார்த்திகேயனுக்கு ஏற்றாற்போல் கொஞ்சம் மாற்றி எடுக்கப்பட்டிருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. லேடி கெட்டப் கூட பார்ப்பதற்க்கு ஒரே மாதிரிதான் உள்ளது.

இதற்கு படக்குழுவினர் வழக்கம்போல இன்ஸ்பிரேஷன் என்று சொல்லப்போகிறார்களா அல்லது தற்செயலாக நடந்த விஷயம் என்று சொல்லப்போகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.