ரஜினி முருகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரெமோ படமும் குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்து மாபெரும் வெற்றியை ருசித்தது. இதுவரை வெளியான சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாகவும் பெயர் பெற்றது.

அதிகம் படித்தவை:  நகைச்சுவை நடிகர் குமரிமுத்து மரணம் - மீள் பார்வை

சமீபத்தில் ரெமோ படத்தின் தெலுங்கு பதிப்பும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பிரம்மாண்டமாக ரிலீஸானது. தமிழை போலவே தெலுங்கிலும் இப்படம் வெற்றிபெற்றதாக படக்குழு விழா எடுத்து கொண்டாடினார்கள். ஆனால் உண்மையில் இந்த படம் சொன்ன அளவுக்கேற்ப அங்கு ஓடவில்லையாம்.

அதிகம் படித்தவை:  விவேகம் போல் இதில் இருக்க கூடாது... சிவாவிற்கு தல போட்ட கண்டிஷன்

எனினும் சிவகார்த்திகேயனின் முதல் தெலுங்கு படம் வெற்றி என்று கூறினால்தான் அவரது எல்லா படங்களையும் நல்ல விலைக்கு அங்கே டப் செய்து விற்கமுடியும். அதனால்தான் இந்த படம் அங்கேயும் ப்ளாக் பஸ்டர் என்பதுபோல் காட்ட விழா நடத்தினார்களாம்.