பாக்ஹி 2

டைகர் ஷெராப் – திஷா பத்தினி நடிப்பில் விரைவில் வெளியாகி உள்ள படம். நம் தமிழில் சிபிராஜ் நடித்த சத்யா ( தெலுங்கில் க்ஷணம் ) படத்தின் ரிமேக். அஹமட் கான் படத்தை இயக்கியுள்ளார். மையக்கதையை மட்டும் எடுத்துக்கொண்டு, பல அதிரடி மாற்றங்களை செய்துள்ளார் படக்குழு.

baaghi 2

‘ஏக்…தோக்…தீன்’

இந்த பாடலை அறியாதவர் யாருமே இருக்க முடியாது. 1988-ம் ஆண்டு வெளியான ‘தேசாப்’ இந்தி படத்தில் இடம் பெற்ற பாடல் இது. லட்சுமிகாந்த் பியர்லால் இசை அமைத்த இந்த பாடலை அல்காயானிக் பாடினார். இந்த பாடலுக்கு மாதுரி தீட்சித் நடனம் ஆடினார்.

ரீமிக்ஸ்

ek-do-teen

பாக்ஹி 2 படத்தில் இப்பாடலின் ரீமிக்ஸ் வேர்சின் இடம்பெற்றுள்ளது.
மேலும் இப்பாடலை படத்தின் இயக்குனர் சந்திரா, ஹீரோயின் மாதுரி தீட்சித், நடன அமைத்த சரோஜ் கான் மூவருக்கும் டெடிகேட் செய்துள்ளது படக்குழு.

madhuri_jacqueline

ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடனம் ஆடி இருக்கிறார். இப்பாடலின் ப்ரோமோ வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது. இதில் ஆடியுள்ள ஜாக்குலின் நடனத்துக்கு எதிர்மறையான விமர்சனம் எழுந்துள்ளது.

ரீமிக்ஸ் வெர்ஷுன்

‘ஏக்…தோக்…தீன்’ பாடலுக்கு மாதுரி தீட்சித் எவ்வளவு அழகாக நடனம் ஆடினார். ஆனால் ஜாக்குலின் ஆடியதைப் பார்த்தால் இது நடனம் போல் தெரியவில்லை. ‘செக்ஸ்’ ஆட்டம் போல இருக்கிறது. மாதுரி தீட்சித் ஆடிய நடனத்தில் ஒரு பங்கு கூட ஜாக்குலின் ஆடவில்லை. ரீமிக்ஸ் பாடல் எந்த ரசனையும் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறி இருக்கிறார் ‘தேசாப்’ படத்தை இயக்கிய என்.சந்திரா.

ஒரிஜினல் வெர்ஷுன்

சினிமாபேட்டை கொசுறு நியூஸ்

எது எப்படியோ இந்த பரபரப்பு படத்துக்கு நல்ல விளம்பரமாகவே அமைந்துவிட்டது என்றால் அது மிகையாகாது.

Ahamad Khan – Saroj Khan – Ganesh Acharya

புது பாடலுக்கு நடனம் அமைத்தவர் கணேஷ் ஆச்சார்யா. இவர் ஒரிஜினல் பாடலில் குரூப் டான்சரில் ஒருவராக இருந்தவர். மேலும் படத்தின் இயக்குனர் ஒரிஜினல் பாடலில் நாடன் உதவியாளராக சரோஜ் கானுடன் செயல்பட்டவர்.