இணையதள சேவைக்காக பல நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டிருக்கின்றன. ஆனால் தற்போது மொபைலில் 4ஜி சேவையில் முதலிடத்தில் ஜியோ நிறுவனம் உள்ளது என்றே கூறலாம். ஏனென்றால் அவர்கள் அடித்தட்டு மக்கள் வரையும் இணையதளம் உபயோகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நெட்வொர்க் சேவையை கொடுத்து வருகின்றன.
இதனை இன்னும் துரிதப் படுத்தும் விதத்தில் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் ஃபைபர் கேபிள் வழியான அதிவேக இன்டர்நெட் சேவையை வர்த்தக ரீதியாக அறிமுகம் செய்வதாக தெரிவித்துள்ளனர். அது என்னவென்றால் இந்த கேபிள்லின் மூலம் இன்டர்நெட் சேவை, கேபிள் , புதிய படங்களை பார்க்கும் வசதி ஆகியவை மாதம் ரூபாய்.700 கட்டணத்தில் வெளிவர உள்ளது.
இந்த மிகப்பெரிய சேவை வெளியே வந்தால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவிடும். மக்கள் கேபிள் டிவி மற்றும் இன்டர்நெட் சேவை தனித்தனியாக கட்டணங்களை செலுத்தி வருவது தற்போது பாதியாக குறைந்துவிடும் என்பதுதான் இவர்களின் நோக்கம். இந்த சேவை வெற்றி பெறுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
4k டிவி , செட்டாப் பாக்ஸ் இலவசமாக வழங்க உள்ளார்களாம். இதனால் பொதுமக்கள் இன்னும் கூடுதல் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
