மும்பை: இதுவரை யாரும் வழங்காத வகையில் ரூ.1500க்கு 4ஜி ஸ்மார்ட்போனை களமிறக்க ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக ஸ்பெரட்ரம் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள ஜியோ, ரூ.1500க்கு 4ஜி ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விளம்பரத்தையும் அந்நிறுவனம் தயாரித்து வருகிறது.

அதிகம் படித்தவை:  சிவாவின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர்களா?

இந்த 4ஜி போனில் மற்ற ஸ்மார்ட்போன்களை போல், வீடியோ சாட், இன்டர்நெட் வசதிகள், ஆப்ஸ் வசதிகள் இருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதி, எஸ்எம்எஸ் வசதிகள் மட்டுமே இருக்கும் என ஜியோ தெரிவித்துள்ளது. வாய்ஸ் கால் மட்டும் பயன்படுத்துபவர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் ஒரு வரப்பிரசாதம்.

அதிகம் படித்தவை:  பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது... நடிகர் யார் தெரியுமா?

முன்னதாக மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இதே போல குறைந்த விலையில் ரூ.1999 க்கு ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது.