கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பில் மட்டும் இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த சில வருடங்களாக நுகர்வோர் துறையில் அதிகளவிலான கவனத்தையும் முதலீட்டையும் செய்து வருகிறது.

இதன் படி மக்களின் அத்தியாவசிய தேவையாக மாறி வரும் மொபைல் மற்றும் டேட்டா சேவைகளை அளிக்கும் டெலிகாம் துறையிலும் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் களமிறங்கியுள்ளது.

இந்திய டெலிகாம் துறையில் ரிலையன்ஸ் ஜியோ இறங்கியவுடன் இத்துறையில் நடந்த மாற்றங்கள் பற்றிச் சொல்லத் தேவையில்லை. இந்நிலையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகத்தின் மூலம் ஈகாமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் மிகப்பெரிய பிரச்சனையும், போட்டியும் சந்திக்க உள்ளது.

flipkart

ஈகாமர்ஸ் துறை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் ஏற்கனவே தனது நுகர்வோர் வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் வரிவாக்கம் செய்து வரும் நிலையில், இன்றைய தலைமுறையினருக்கு ஏற்றார்போல் AJIO மூலம் ஈகாமர்ஸ் விற்பனையிலும் இறங்கியுள்ளது.

ரிலையன்ஸ் ரீடைல் இந்தியா முழுவதும் தற்போது தனது டெலிகாம் சேவை விரிவாக்கம் அடைந்துள்ள நிவையில் ரிலையன்ஸ் ரீடைல் சிறு சிறு கடைகள் இணைத்து அவர்களுக்குக்காண பொருட்களை நேரடியாக அளிக்க முடியும்.

reliance

இதற்கு ரிலையன்ஸ் ரீடைல் கடைகள் பெரிய அளவில் உதவும் என இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதியியல் அதிகாரியான மோகன்தாஸ் பாய்த் தெரிவித்துள்ளார்.

இதற்காகவே ரிலையன்ஸ் மார்கெட் என்ற தனிப்பிரிவும் உள்ளது. AJIOவும் ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் வர்த்தகத்தின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈகாமர்ஸ் நிறுவனங்கள் ரிலையன்ஸ் ரீடைல் பரிவின் இந்த அதிரடி வளர்ச்சி இந்திய நுகர்வோர் சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அதுமட்டும் அல்லாமல் இந்த மாற்றத்தால் நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

amazon

இணைப்புகள் தொடரும்.. ஜியோ-வின் அறிமுகத்தின் மூலம் டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் சிறு சிறு நிறுவனத்தை வாங்கியதைப் போல், நுகர்வோர் சந்தையிலும் ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தக விரிவாக்கத்தின் மூலம் ஈகாமர்ஸ் துறையில் நிறுவன இணைப்புகள் ஆரம்பம் ஆகும்.

இந்த மாற்றம் அடுத்த வருடமே நடக்கும் என மோகன்தாஸ் தெரிவித்துள்ளார். 3 பேர் இதன் மூலம் இந்திய ரீடைல் சந்தையில் அமேசான், பிளிப்கார்ட், ரீலையன்ஸ் ஆகிய 3 பெரிய விற்பனையாளர்கள் மட்டுமே இருப்பார்கள்.

amazon

இதில் ரீலையன்ஸ் நிறுவனத்திடம் ஏற்கனவே அதிகளவிலான கடைகள் இருக்கும் நிலையில், விநியோகம் எளிமையாக நடத்த முடியும், அதேபோல் பிற இரண்டு நிறுவனங்களை ஒப்பிடுகையில் ரிலையன்ஸ் நிறுவனத்தால் எளிமையாக முதலீடு செய்ய முடியும்.

ரிலையன்ஸ் குழுமம் அடுத்தச் சில வருடத்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் முக்கிய வர்த்தகமாக எண்ணெய் உற்பத்தியில் இருந்து நுகர்வோர் சந்தையாக மாறும் எனச் சந்தை ஆய்வுகள் கூறுகிறது.

ஈகாமர்ஸ் துறை இந்திய ஈகாமர்ஸ் துறையில் பிளிப்கார்ட் நிறுவனம் போட்டிகள் இல்லாமல் கொடிகட்டி பறந்து வந்த நிலையில், அமேசான் வந்த பின்பு பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிலை முழுமையாக மாறியது.

flipkart

அமேசானுக்குப் பின்பு இந்தியாவில் அமேசான் வந்த பின்பு போட்டி அதிகமான காரணத்தால் பிளிப்கார்ட் உட்படப் பல முன்னணி நிறுவனங்களும் வர்த்தகம் செய்ய முடியாமல் தவித்தது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் மற்றும் நிறுவன கைப்பற்றுதலுக்குப் பின் அமேசான் நிறுவனத்திற்கு இணையாகப் பிளிப்கார்ட் உயர்ந்துள்ளது.

ஆனால் இரு நிறுவனங்களுமே போட்டியின் காரணமாகத் தற்போது அதிகளவிலான தள்ளுபடியை அறிவிப்பதன் மூலம் தொடர்ந்து நஷ்டத்தை மட்டுமே பெற்று வருகிறது. இது இந்திய ஈகாமர்ஸ் சந்தைக்குச் சரியானது அல்ல.

more

இத்தகைய சூழ்நிலையில் தான் ரிலையன்ஸ் ரீடைல் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முயற்சி செய்து வருகிறது.

ரீடைல் சந்தை இந்திய ரீடைல் சந்தையில் ஏற்கனவே ப்யூச்சர் குரூபின் பிக் பஜார், ஆதித்யா பிர்லா குழுமத்தின் மோர் சூப்பர்மார்கெட், ஸ்டார் பஜார், அவென்யூ சூப்பர்மார்கெட்டின் டிமார்ட், வால்மார்ட் ஆகியவற்றுடன் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் வர்த்தகம் செய்து வருகிறது.

Big-Bazaar

இப்படி ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் பல வலிமையான நிறுவனங்கள் இருக்கும் நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் எப்படிப்பட்ட திட்டத்தைக் கையாளப்போகிறது என்பது முக்கியக் கேள்வியாகவே உள்ளது.

ஜியோ நிறுவனத்தில் அறிவித்ததைப் போல் இங்கும் இலவசம் என்று விட்டால் கண்டிப்பாகக் கட்டுப்படியாகாது. அகவே, ரிலையன்ஸ் ரீடைல் ஆட்டைத்தை பொறுத்திருந்து பார்ப்போம்.

முகேஷ் அம்பானி கட்டியாளும் நாட்டின் மிகப்பெரிய வர்த்தக குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கீழ் என்னென்ன நிறுவனங்கள் இருக்கிறது தெரியுமா..?