பாலா இயக்கத்தில் சசிக்குமார், வரலக்ஷ்மி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தாரை தப்பட்டை. ஒரு தரப்பு இப்படத்தை பாராட்டியும் மற்றொரு தரப்பு இப்படத்துக்கு எதிர்மறையான விமர்சனத்தையும் வழங்கிவருகிறார்கள்.

இந்நிலையில் பொங்கலன்று வெளியான இப்படம் இதுநாள் வரை ரூ. 10 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இப்படத்தின் பட்ஜெட் ரூ. 15 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. பாலா மற்றும் சசிக்குமார் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.