fbpx
Connect with us

ரிலையன்ஸ் அதிரடி அறிவிப்பு… ரூ.148க்கு ரீசார்ஜ் செய்தால் 70GB 4G டேடா, 70 நாட்கள் வேலிடிட்டி..!

ரிலையன்ஸ் அதிரடி அறிவிப்பு… ரூ.148க்கு ரீசார்ஜ் செய்தால் 70GB 4G டேடா, 70 நாட்கள் வேலிடிட்டி..!

4G டேடா சேவையில் மற்ற நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் புதிய அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளது. இது நேற்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்படி, புதிய வாடிக்கையாளர்கள் ரூ.148க்கு முதல் ரீசார்ஜ் செய்யும் பொழுது 70GB  4G  டேடா, ரூ.50 டாக் டைமுடன் 70 நாட்கள் வேலிடிட்டியில்  கொடுக்கப்படுகிறது. வாய்ஸ் கால் வசதி இந்த பிளானில் வழங்கப்படவில்லை. வாய்ஸ் கால்களை ஒரு நிமிடத்துக்கு 25 பைசாவில் பெறலாம்.

இது தவிர,  ரூ.54,  மற்றும் ரூ. 61 ஆகிய ரீசார்ஜ் ஆப்சன்களும் உள்ளன. ,  ரூ.54க்கு ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 1GB  4G  டேடா, 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. அதன் படி, ரிலையன்ஸ் மொபைல் கால்கள்  ஒரு நிமிடத்துக்கு 10 பைசாவிலும், மற்ற மொபைல்களுக்கு 25 பைசாவிலலும் கால்களை பெறலாம்.

இந்த அறிவிப்பு மே-1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. ஆரம்பகட்டமாக, தெலங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில்  உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top