Connect with us
boomerang-movie

‘றெக்க’ பேர கேட்டாலே டென்ஷன்: ரெமோ, தேவி அலறல்

rekka-remo-devi

‘றெக்க’ பேர கேட்டாலே டென்ஷன்: ரெமோ, தேவி அலறல்

வருகிற ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழகத்தில் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை என்பதால், அந்த வீக்கெண்டில் சிவகார்த்திகேயனின் ரெமோ, பிரபுதேவாவின் தேவி, விஜய் சேதுபதியின் றெக்க என மூன்று பெரிய தமிழ் படங்கள் வெளிவருகிறது.

இதில் ஒவ்வொரு படத்துக்கும் உள்ள எதிர்பார்ப்பு மற்றும் பிளஸ், மைனஸ்களை பார்ப்போம்:

1. ரெமோ (ரிலீஸ் தேதி – அக்டோபர் 7)

சிவகார்த்திகேயன் கேரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் படம் என்பதாலும் அவ்வை சண்முகி பாணியில் சிவகார்த்திகேயன் லேடி கெட்டப்பில் நடித்திருப்பதாலும் இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. பட்ஜெட் முதல் ப்ரொமோஷன் வரை தொட்டதுகெல்லாம் பிரம்மாண்டம்.

ஆனால் இதுபோன்ற ஹைப்புடன் வெளியான படங்கள், ரசிகர்களை கவர்ந்து வெற்றிபெற்றிருப்பது தமிழ் சினிமா வரலாற்றில் மிகக்குறைவே. எனவே ரெமோவுக்கு இது ஒரு பலப்பரீட்சையே ஆகும். மேலும் இது ஹாலிவுட் படத்தின் தழுவல் என்பது இப்படத்துக்கு இன்னொரு மைனஸ்.

2. தேவி (ரிலீஸ் – அக்டோபர் முதல் வாரம்)

பிரபுதேவா, தமன்னா நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இன்னொரு ஹாரர் படம் தேவி. 12 வருட இடைவெளிக்குப் பிறகு பிரபுதேவா தமிழில் ஹீரோவாக நடித்திருக்கும் படம் என்கிற எதிர்பார்ப்பு இருந்தாலும் வரிசையாக பேய் படங்கள் தோல்வி அடைந்து வருவது இப்படத்துக்கு ஒரு மைனஸ் ஆகும்.

அதுவும் இல்லாமல் ஒரேநேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தனித்தனியாக உருவாகியிருப்பதாக சொல்லப்பட்டாலும் டிரைலர் மற்றும் பாடல் காட்சிகளை பார்த்தால் டப்பிங் படம் பார்ப்பது போன்ற உணர்வையே ஏற்படுத்துகிறது. இது மிகப்பெரிய மைனஸ்.

3. றெக்க (ரிலீஸ் – ஆயுத பூஜை)

விஜய் சேதுபதி, லக்ஷ்மி மேனன் நடிப்பில் குறுகிய காலத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் றெக்க. இந்த ஆண்டில் வெளியாகும் ஆறாவது விஜய் சேதுபதி படம் இது. இதற்குமுன்பு வெளியான ஐந்து படங்களுமே நல்ல வசூலை குவித்துள்ளது.

இது ஒருபக்கம் இருக்க தமிழ் சினிமாவின் அதிர்ஷ்ட தேவதை என்றழைக்கப்படும் லக்ஷ்மி மேனன்தான் இப்படத்தின் ஹீரோயின். இது ‘றெக்க’க்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. இதனாலோ என்னவோ விநியோகஸ்தர்கள் முதல் தியேட்டர் உரிமையாளர்கள் வரை றெக்க படத்தை வாங்கவே ஆரவம்காட்டி வருகிறார்கள். மேலும் விஜய் சேதுபதியின் மாஸ் அவதாரத்தை காண ரசிகர்களும் ஆர்வமாய் இருக்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும், இந்த முறையும் விஜய் சேதுபதியே பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்துவாரோ என ரெமோ படக்குழுவும் தேவி படக்குழுவும் அச்சத்தில் இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top