vijay sethupathi rekka gilli

விஜய் சேதுபதி தனக்கென்று ஒரு பாதை அமைத்து அதில் பயணிப்பவர். இவர் படம் வெற்றியோ, தோல்வியோ ரசிகர்கள் எப்போதும் இவரை தலையில் தூக்கி கொண்டாடுவார்கள்.

இந்நிலையில் இவர் அடுத்து நடிக்கும் படம் றெக்க, இப்படத்தில் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கின்றார்.

இந்த படத்தின் மூலம் முழு நீள கமர்ஷியல் நாயகனாக விஜய் சேதுபதி அவதாரம் எடுக்கின்றார். மதுரை பின்னணியில் கதை நடப்பது போல் கூறப்படுகின்றது.

மேலும், விஜய் நடித்த கில்லி படத்தை போன்றே தான் இந்த படத்தின் கதையும் இருக்கும் என கிசுகிசுக்கப்படுகின்றது. இந்த கமர்ஷியல் விஜய் சேதுபதியையும் ரசிகர்கள் ஏற்றுகொள்வார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.