வெளிநாடுகளில் சர்வசாதாரணமாக நிகழ்வுகள் இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்படாது

உலகம் முழுக்க வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய சில ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட நிகழ்வுகள் பல நடந்துள்ளது, வெளிநாடுகளில் சர்வசாதாரணமாக இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்படாததே இதற்க்கு காரணம் ஜேம்ஸ் பாண்ட் ஸ்பெக்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு முத்தக்காட்சி மிக நீளமாக இருப்பதைக்கூறி அதை வெட்டி சிறிதாக்கிய இந்திய சென்சார் போர்ட்டிற்கு இந்த 5 ஹாலிவுட் படங்களை தடை செய்வதற்கு இப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளே போதுமானதாக இருந்தன.

அந்த 5 ஹாலிவுட் படங்கள் எவை எதற்க்காக தடை செயப்பட்டது என்பதை பற்றி இப்போது பார்ப்போம் :-

1 . Salo , or the 120 Days of Sodom

இத்தாலிய ஃபிரெஞ்சு படமான இது 1975 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது, இயக்குநர் பியர் பவுலோ பஸோலினி என்பவர் இயக்கி இருந்தார், நான்கு பாசிச காம வெறியர்களால் கடத்தப்படும் ஒன்பது இளைஞர்கள் மற்றும் ஒன்பது இளம் பெண்கள் சுமார் 120 நாட்கள் அடைத்துவைக்கப்பட்டு உடல், மன ரீதியில்மட்டுமில்லாமல் பாலியல் ரீதியிலும் சித்ராவைதைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.
இதில் இந்த 18 பெரும் படம் முழுக்க நிறுவனமாகவே காண்பிக்கப்படுவார்கள், உலகம் முழுவதும் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட இந்த படத்தை இந்தியாவில் வெளியிட யோசிக்க கூட மறுத்துவிட்டது இந்திய சென்சார் போர்ட்.

அதிகம் படித்தவை:  விஜய்யின் புலியை நம்பி பாகுபலிக்கு நோ சொன்ன ஸ்ரீதேவி: ஃபீல் பண்ணுகிறாரோ?

2 . I Spit on Your Grave :-

1978 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை மெயிர் சர்கி என்பவர் இயக்கி இருந்தார் ஐந்து காமவெறியர்களால் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு தன்னை வன்புணர்வு செய்தவர்களை பழி வாங்கிட புறப்படுகிறார்கள், ஏராளமான வன்முறை காட்சிகள் நிறைந்திருந்த இப்படத்தை இந்திய உட்பட பல நாடுகளில் வெளியிட தடை செய்துள்ளனர்.

3 . Cannibal Holocaust :-

1980 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை ருக்கிறோ டீயோடேட்டா என்பவர் இயக்கி இருந்தார் அமேசான் மலைக்காடுகளில் வாழும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் பல முகம்சுழிக்கும் காட்சிகள் இடம்பெற்றிந்தது.
உதாரணமாக பெண்ணுறுப்பை சிதைப்பது, உடலை பிளந்து உள்ளுறுப்புகளை எடுக்கும் காட்சிகள் படத்தை பாப்போரை பதைபதைக்க வைத்தது,மிக வன்முறையான படத்தை படமாக்கியதால் இப்படத்தின் இயக்குநரை கைது செய்ய உத்தரவிட்டது இத்தாலிய நீதிமன்றம், இந்திய உட்பட பல நாடுகள் இப்படம் தங்கள் நாட்டில் திரையிட தகுதியற்றது எனக்கூறி நிராகரித்துவிட்டன.

அதிகம் படித்தவை:  ஹாலிவுட் ரசிகர்களுக்கு இல்லை...இந்திய ரசிகர்களுக்கு தான் முதல் ஷோ - "தி ஜங்கிள் புக்"

4 . Cannibal Ferox :-

அம்பேர்ட்டோ லென்ஜி என்பவர் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்தது இந்த இத்தாலிய திரைப்படம், இப்படம் முழுவதும் மனிதர்களுக்கு எதிரான மனிதாபிமானமற்ற வன்முறை காட்சிகளும், மிருங்கங்களுக்கு எதிரான மிருகத்தனமான வன்முறை காட்சிகளும் ஏராளமாக படமாக்கப்பட்டு இருந்தன, இதுவரை வெளிவந்த படங்களிலேயே மிக மிக வன்முறை காட்சிகள் அடங்கிய படம் என்பதால் இந்தியாவில் வெளியிட இந்திய சென்சார் போர்ட் அனுமதி மறுத்தது. மேலும் இப்படத்தை 31 உலகநாடுகளும் வெளியிட தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5 .Indiana Jones and the Temple of Doom :-

ஹாலிவுட் உலகின் முன்னணி இயக்கனர்களில் ஒருவரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளியானது இப்படம், இந்திய கலாச்சாரம் மற்றும் அதனின் பாரம்பரியத்தை கேலி செய்யும் விதமாக சித்தரிக்கப்பட்டு இருந்ததால் இந்திய சென்சார் போர்ட் இப்படத்தை வெளியிட தடை செய்திருந்தது, பின் நாட்களில் இந்த தடை விளக்கிக்கொள்ளப்பட்டது.