பொடென்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிக்க,சந்தீப், ஸ்ரீ, ரெஜினா, சார்லி, மூனீஷ்காந்த் ஆகியோர் நடிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்க உருவாகியுள்ள படம் மாநகரம். இந்த படம் வரும் 10ம் தேதி ரிலீஸ் ஆகப்போகிறது.

அதனால் பட ப்ரோமோஷனுக்கு வந்திருந்தார் ரெஜினா. அப்போது பாவனா விவகாரம் பற்றி பேசியபோது,’ நான் தமிழில் தான் அறிமுகம் ஆனேன். வளர்ந்து வரும் நடிகை என்பதால் போனில் கூப்பிட்டு நடிக்க விருப்பமா? என்பார்கள். பிடித்தால் ஓகே என்பேன். இப்படித்தான் ஒருமுறை ஒருவர் கூப்பிட்டு பேசினார். அப்புறம் தயங்கியபடி,
“அட்ஜெஸ்மெண்ட் பண்ணுவீங்களா” ன்னர். அப்படின்னா என்னென்னு தெரியாது. அதன் பிறகு அது என்னவென்று தெரிந்துகொண்டேன்.

அதுக்கப்புறம், யாராவது கூப்பிட்டால், அவுங்க பேக்கிரவுண்ட் பார்த்துட்டு நல்ல மனிதர்கள் கொண்ட வர்களாக இருந்தால் மட்டுமே பேச ஆரம்பித்தேன். நாம் கவனமாக இருப்பதே பாதுகாப்பின் முதல் வெப்பன்.

வேலை செய்யும்போது நம்மை சுற்றி உள்ளவர்களை நம்பித்தான் செய்கிறோம். அவர்களே இப்படி இருந்தால் என்ன செய்வது? பெண்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.”என்று பேசியுள்ளார்.