அட ஆமாங்க இரண்டு நாட்களாக நம் ட்விட்டர் வாசிகள், மற்றும் மேமே போடுபவர்களுக்கு நல்ல தீனியாக  அமைந்து விட்டது ரெஜினா காசான்றா வின் இந்த போட்டோ.

ரெஜினா காசான்றா

தமிழ், தெலுங்கு என்று பிஸியாக நடித்துக்கொண்டிருப்பவர் நம் ரெஜினா. இவர் எப்போதும் வித்தியாசமாக டிசைன் செய்யப்பட்ட உடைகளை அணிய  விரும்புபவர். ரெஜினா விழாக்களில் பங்கேற்றால், அவர் உடை மற்றும் அலங்காரம் அங்கு ஸ்பெஷல் ஹைலைட்டாக பேசப்படும். அவ்வாறு ஒரு விழாவில் அவர் கலந்துக்கொண்ட போட்டோ ஒன்று வைரல் ஆனது.

Regina Cassandra

நாம் மேல பார்த்த போட்டோ புதியது அல்ல. இந்த சாரியில் அவர் தோன்றும் போட்டோ 2014 ல் எடுக்கப்பட்டது. SIIMA அவார்ட்ஸ் நிகழ்ச்சி அந்த ஆண்டு மலேசியாவில் நடைபெற்றது. அது சம்பந்தப்பட்ட ஒரு மார்க்கெட்டிங் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது இந்த போட்டோ.

Regina Cassandra at an event promoting SIIMA 2014

பழைய போட்டோ ஒன்றை யாரோ விஷமி ட்விட்டரில் அப்லோட் செய்தார். பலர்  அதை ரீ ட்வீட் செய்தனர். சமூக வலைத்தளங்களில் பலரும்  ரெஜினாவை பங்கமாக கலாய்க்க தொடங்கிவிட்டனர்.  அதில் ஒரு சில கலாய் “ஸ்கெல் இங்க இருக்கு, பென்சில் எங்க?”. “கோடு போட நான் ரெடி”. “செம்ம எனக்கு ஸ்கூல் மிஸ் நினைவுகள் வருது ரெஜினா..”.

#ReginaCassandra #troll

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

என்ன ஏது என்று ஆராயாமல் பல சினிமா வெப் சைட்களும் இந்த புடவை போட்டோ புதியது என்று நினைத்து, அதை வைரல் நியூஸ் ஆக்கிவிட்டனர் என்பது தான் நிதர்சனமான உண்மை.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்:

பாலிவுட்டில் சேலையில் வித விதமாக கலக்குபவர் வித்யாபாலன் என்றால், நம் ஊரில் ரெஜினா தான் சிறப்பு. விதவிதமாக சேலையில் தோன்றும் அவரை ஸ்பெஷல் என்று தான் சொல்லவேண்டும்.

Two in One. Regina Cassandra . Vidya Balan

விடுங்க மக்களே, பாவம் அவர் ட்ரோல் பண்ணாதீங்க. அழகை ரசிங்க, ஆனால் ஆராய்ச்சி பண்ணாதீங்க.