இவர்களில் சிலர் இன்று உயிருடன் இல்லை… ஆயினும், இவர்களது படங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் மூலமாக இன்றும் பலருக்கு தாயன்பை ஊட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

குறிப்பாக மனோரமா அவர்கள் இறந்துவிட்டார் என்பது இன்றளவும் நம்ப முடியாத ஒன்று. ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த அவர், நூற்றுக்கும் மேற்ப்பட்ட படங்களில் தாய் வேடம் ஏற்று தாய் உணர்வை நமக்கு திரையில் காண்பித்து உணர வைத்தவர்.

அந்த வரிசையில், தமிழ் சினிமாவில் திரையில் தாய் உணர்வை காண்பித்த அன்பான அம்மா கதாபத்திரங்கள்….

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

1

1

பண்டரி பாய் – 70-களில் இருந்து 90-கள் வரை… எம்ஜிஆர் முதல் ரஜினிகாந்த் வரை பல முன்னணி நாயகர்களுக்கு அம்மாவாக நடித்தவர் பண்டரி பாய்.

மன்னன் படத்தில் பாரலைஸ் ஆன கதாபாத்திரத்தில் மெய்சிலிர்க்க வைத்திருப்பார். அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாடலுக்கு உயிர் கொடுத்தவர் பண்டரி பாய்.

2

2

மனோரமா – 80-களில் இருந்து 90-கள் வரை தமிழ் சினிமாவின் பெரும்பாலான படங்களில் அம்மா வேடம் ஏற்று நடித்தவர் மனோரமா.ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார், கார்த்தி என அனைவருக்கும் அம்மா வேடத்தில் நடித்துள்ளார். இவரது குரலில் மகனே… என அழைக்கும் போது எல்லாருக்கும் அம்மாவின் அரவணைப்பு கட்டு அணைத்துக் கொள்ளும்.

அதிகம் படித்தவை:  வருகிறது ஜெயா டிவிக்கு சிக்கல்! பன்னீரின் அடுத்த அதிரடி! சசி குரூப் அதிர்ச்சி!
3

3

எஸ்.என். லக்ஷ்மி – நீ அழகன்டா… உனக்கு என்ன குறைச்சல்… என சர்வர் சுந்தரம் படத்தில் மகன் நாகேஷை பார்த்து கூறுவார். 60, 70களில் அம்மா வேடங்களில் நடித்தவர். எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், சர்வர் சுந்தரத்தில் இவர் நடித்த அம்மா வேடம் சிறந்தது என கூறலாம்.

4

4

சுஜாதா – ஜோடியாக நடித்த நடிகர்களுக்கே அம்மாவாகவும் நடித்தவர் சுஜாதா. 90களில் நிறைய அம்மா வேதங்கள் ஏற்று நடித்திருந்தார். ரஜினி, கமல் என முன்னணி நட்சத்திரங்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.

5

5

ஸ்ரீ வித்யா – சின்ன தாயவள்…. அந்த ஒரு பாடலும், தளபதி படமும் மட்டுமே போதுமே… இவர் திரையில் அம்மாவை உணர வைத்த சிறந்த நடிகை என்பதற்கு. வேறு என்ன வேண்டும்.

6

6

சுமித்ரா – 90களில் அம்மாக்கள் வேடங்களில் கலக்கிய மற்றுமொரு நடிகை சுமித்ரா. சிங்காரவேலன், அக்னி நட்சத்திரம் போன்ற படங்கள் இவரது அம்மா வேடங்களுக்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்தவை.

அதிகம் படித்தவை:  படும் கவர்ச்சி உடையில் நடந்து வந்த நீத்து சந்திரா.! வீடியோ இணைப்பு.!
7

7

ராதிகா – 90களின் இறுதியில் அம்மா வேடங்கள் ஏற்று நடிக்க துவங்கினார். ரோஜா கூட்டம் முதல் சமீபத்தில் வெளியான தங்கமகன், தெறி போன்ற படங்களில் தனக்கான அம்மா வேடத்தை சிறப்பாக செய்த நடிகை ராதிகா.

8

8

சரண்யா – இப்போதைய தமிழ் சினிமாவில் அம்மா என்றாலே நினைவிற்கு வருபவர் சரண்யா தான். காமெடி அம்மா முதல் சீரியஸ் அம்மா வரை எல்லா வகையான அம்மா ரோல்களிலும் நடித்து பெயர் பெற்றவர்.

9

9

ரேணுகா – சினிமா மட்டுமின்றி, குறும்படங்கள், சின்னத்திரை நாடகங்கள் என்ன அம்மா வேடம் ஏற்று அதற்கான உணர்வை முழுமையாக கொடுத்த நடிகை என இவரை குறிப்பிடலாம்.

10

10

நதியா – அம்மா வேடம் ஏற்கும் அளவிற்கு வயதை நெருங்கினாலும், இவரது அழகு இன்னும் நடிகைகளின் அக்கா வேடம் ஏற்கும் அளவிற்கு இருக்கிறது. ஆயினும், எம். குமரன் சண் ஆப் மகாலக்ஷ்மி யாரால் மறக்க முடியும்.