fbpx
Connect with us

நிலாவில் இடம் வாங்கிய ரீல் தோனி… ஆச்சரியத்தில் பாலிவுட்

News / செய்திகள்

நிலாவில் இடம் வாங்கிய ரீல் தோனி… ஆச்சரியத்தில் பாலிவுட்

நிலாவில் இடம் வாங்கிய ரீல் தோனி… ஆச்சரியத்தில் பாலிவுட்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு எம்.எஸ்.தோனி: ஏ அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் படமானது. இதில், தோனியாக பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்திருந்தார். முழுக்க முழுக்க திரைப்படமாக உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் கோரக்பூர் ரயில் டிக்கெட் செக்கரான தோனி, 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது எப்படி என்பதை விளக்கும் வகையில் அமைந்திருந்தது. இந்த படத்துக்கும் ரசிகர்கள் அமோக வரவேற்புக் கொடுத்தனர்.

தோனியின் பள்ளிக் காலம், காதல், டிக்கெட் செக்கர் வாழ்க்கை,ரஞ்சிக் கோப்பை நாட்கள், இந்திய அணியில் இடம் கிடைத்த நாட்கள் மற்றும் உலகக் கோப்பையை வென்றது என 2011ம் ஆண்டு வரை அவரது வாழ்வின் முக்கியமான தருணங்களை அந்த படத்தில் மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. தோனி வாழ்வின் சொல்லப்படாத பல பக்கங்கள் குறித்து பேசிய அந்த படம், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைப் பெற்றது. தோனியின் ஹெலிகாப்டர் ஷாட், மேனரிசம் என ரியல் தோனியைத் திரையில் கொண்டு வந்திருந்தார் சுஷாந்த். இதனால், அவருக்கு ரசிகர்கள் வட்டம் அதிகரித்தது.

சுஷாந்த் தற்போது நிலாவைப் பற்றிய சந்தா மாமா படத்தில் நடித்து வருகிறார். அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் வானியல் குறித்து ஈடுபாடு அதிகம் கொண்டுள்ள சுஷாந்த், அந்த படத்துக்காக நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டார். விண்வெளியில் நடப்பது. புவியீர்ப்பு விசையற்ற பகுதிகளில் வாழ்வது என பல்வேறு பயிற்சிகள் அங்கு சுஷாந்துக்கு அளிக்கப்பட்டன. விஞ்ஞானப்பூர்வமான வாதங்களை முன்வைக்கும் சுஷாந்திடம், தொலைநோக்கி ஒன்றும் சொந்தமாக இருக்கிறது. பொதுமக்கள் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள தொலைநோக்கிகளில் மிகவும் அட்வான்ஸானதாகக் கருதப்படும் the Meade 14” LX600 – ரக தொலைநோக்கி சுஷாந்திடம் இருக்கிறது.

இந்தநிலையில், சுஷாந்த் நிலவில் இடம் ஒன்றை வாங்கியிருக்கிறார். பூமியில் இருந்து மறைவான பகுதியாகக் கருதப்படும் மேர் மஸ்கோவியன்ஸ் (Mare Muscoviense,) அல்லது மஸ்கோவி கடல் (the Sea of Muscovy) என்றழைக்கப்படும் நிலவின் பகுதியில் அவர் இடம் வாங்கியிருக்கிறார். இதற்கான பதிவுச் சான்றிதழை வெளியிட்டுள்ள அவர், அந்த இடத்தை எவ்வளவு தொகை கொடுத்து வாங்கினார் என்ற தகவலை வெளியிடவில்லை. இதன்மூலம், நிலவில் இடம் வாங்கிய முதல் பாலிவுட் நடிகர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். கிங் ஆஃப் பாலிவுட் ஷாருக்கானுக்கு ரசிகர் ஒருவர் நிலவில் வாங்கிய இடத்தை பரிசாகக் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top