புதன்கிழமை, நவம்பர் 13, 2024

அட கண்ராவியே! மூக்கிலிருந்து சளி, அவார்டு உறுதி.. பிச்சையெடுக்க கவின் பட்ட பாடு

அமரன் படத்தின் ஆடியோ லாஞ்சுக்கு போட்டியாக நேற்று கவினின் ப்ளடி பெக்கர் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த தீபாவளி-க்கு டாக்டர் படத்தை இயக்கிய நெல்சனும் சிவகார்த்திகேயனும் நேரெதிராக தீபாவளிக்கு மோத உள்ளனர். இந்த ரேஸில் எந்த படம் வெற்றி பெரும், என்ற போட்டியுமுள்ளது.

ஆனால் கைவினை பொறுத்த அளவில், சிவகார்த்திகேயனுக்கு போட்டியெல்லாம் இல்லை என்பதை சூசகமாக சொல்லிவிட்டார். இந்த தீபாவளிக்கு நாள் விடுமுறை உள்ளது. இன்னும் ஒரு படத்தை கூட வெளியிடலாம்.. கரெக்ட் ஆக இருக்கும் என்று. ஆகையால் அவர் போட்டி மனப்பான்மையில் படத்தை வெளியிட வேண்டும் என்று நினைக்கவில்லை.

ஆனால் ரசிகர்களோ, “செலவை பார்த்து நாங்க கிருஷ்ணர் நரகாசுரனை மன்னித்துவிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும், என்று புலம்பி கொண்டிருக்கிறோம். இதில் குடும்பத்தோடு படத்திற்கு வேறையா” என்று புலம்பி கொண்டு வருகினறனர்.

மூக்கிலிருந்து சளி..

இந்த படத்திற்காக கவின் உண்மையாகவே பிச்சை எடுத்தார் என்று அந்த நிகழ்வில், இயக்குனர் சொன்னபோதே, கவின் மீது ஒரு அபாரமான ஒரு எதிர்பார்ப்பு மக்களுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில், காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி சொன்ன விஷயம் மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக அழும் காட்சிகளுக்காக, நடிகர் நடிகைகள் கிளிசரின் பயன்படுத்துவார்கள். ஆனால் ஒரு சிலர், இயற்கையாகவே நடிப்பில் பின்னி பெடலெடுத்து விடுவார்கள். அந்த வகையில் கவினும் ஒருவர். இந்த படத்தில் கவினுக்கு மூக்கில் இருந்து சளி வருது. அந்த அளவுக்கு பையன் நடிப்பில் பர்ஃபார்மன்ஸ் செய்திருக்கிறார்.

நிச்சயம் இந்த நடிப்புக்கு அடுத்த வருஷம் நிறைய அவார்டுகளை கவின் வாங்குவார் என ரெட்டின் கிங்ஸ்லி பேச அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்து விட்டது. அய்யோ போதும் வாய்யா என்கிற ரீதியில் கவின் ரியாக்‌ஷன் செய்து விட்டார். இதை பார்த்த ரசிகர்கள் படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

- Advertisement -spot_img

Trending News