Connect with us
Cinemapettai

Cinemapettai

அதிரடி சரவெடியான புதையல் வேட்டை.. ராக் மிரட்டும் ரெட் நோட்டீஸ் விமர்சனம்

red-notice-review

India | இந்தியா

அதிரடி சரவெடியான புதையல் வேட்டை.. ராக் மிரட்டும் ரெட் நோட்டீஸ் விமர்சனம்

அதிக எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான படம் தான் ரெட் நோட்டீஸ். நவம்பர் 5 திரை அரங்க ரிலீஸ், 12 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. ஹாலிவுட் சினிமாவின் மோஸ்ட் வான்டட் என சொல்லப்படும் (தி ராக்) ட்வேய்ன் ஜான்சன், ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் கேல் கடோட் மூவரும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். தர்பர் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

கதை – பேரழகி கிளியோபாட்ரா வைத்திருந்த மூன்று தங்க முட்டையை தேடுவதோடு ஆரம்பமாகிறது கதை. ராக் எப்பிஐ ஏஜென்ட், ரெனால்ட்ஸ் முதல் முட்டையை திருட வர, இன்டர்போல் உதவியுடன் அவனை கைது செய்கிறான். பின்னர் கேல் கடோட் அதனை கடத்திவிட்டு ராக்கை சிக்க வைத்து விடுகிறாள்.

ராக் மற்றும் ரெய்னால்ட்ஸ் இருவரும் கூட்டணி அமைக்கின்றனர். உலகிலேயே நம்பர் ஒன் திருடன் ஆக மூன்று முட்டையை எடுக்க பிளான் போடுகிறான் ரெய்னால்ட்ஸ். கேல் கேடோட்டடை கைது செய்ய பிளான் போடுகிறான் ராக்.

எனினும் சில பல ட்விஸ்ட்க்கு பின் கேல் கேடோட் மற்றும் ராக்; ரெய்னால்ட்ஸை டபிள் க்ராஸ் செய்கின்றனர். இறுதியில் மூவரும் டீம் போட அடுத்த பார்ட்டுக்கான எதிர்பார்ப்புடன் படம் முடிகிறது.

சினிமாபேட்டை அலசல் – இந்தியனா ஜோன்ஸ் ஸ்டைல் படத்தில் ஆக்ஷனுடன் காமெடியை சேர்த்து கொடுத்துள்ளனர் இந்த டீம். மேக்கிங் கலக்கல் தான், திரை அரங்கத்தில் பார்க்கும் பட்சத்தில் முழு திருப்த்தி கிடைக்கும்.

மூன்று செலிபிரிட்டி நடிகர்களை ஒரே படத்தில் இணைந்திருப்பது பெரிய ப்ளஸ், எனினும் அவர்களின் நடிப்புக்கு போதிய தீனியாக இப்படம் அமையவில்லை எனவும் சொல்லலாம்.

சினிமாபேட்டை வெர்டிக்ட் – ஒரு முறை தாராளமாக பார்க்கக்கூடிய காமெடி ஆக்ஷன் படமே இந்த ரெட் நோட்டீஸ்.

சினிமாபேட்டை ரேட்டிங் 3 /5

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top